thevarji

thevarji

Monday, January 3, 2011

அண்ணனின் கடிதம் - 5

பாசத்திற்குரிய தம்பி, தங்கைகளே!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களை இணையத்தில் மூலம் சந்திப்பதில் எப்போதும்போல் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஆங்கில  புதுவருடம் பிறந்துள்ள இந்த நல்லநேரத்தில் உங்களனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் எது நடக்கக்கூடாது என நினைத்திருந்தேனோ, அது நடந்து விடக்கூடும் என தோன்றுகிற காரணத்தால் இந்த மடலை இன்று எழுதவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் சட்டமன்ற பொதுத்தேர்தல் நெருங்கிவருவதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அந்தத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் துரோகம் இழைத்துள்ள ஆளும் திமுக அரசு என்ன விலைகொடுத்தாவது வெல்ல முயலுவதும் நாம் அறிந்ததுதான். அதுவும் ஸ்பெக்ட்ரம் மூலம் சுருட்டிய ஒரு லட்சத்தி எழுபத்தியாறு கோடியும், அரசு அதிகாரமும் தங்கள் கையில் இருப்பதால் எதையும் செய்து தேர்தலில் வெற்றிபெற அவர்கள் முயலுவது இயற்கையே.

அனைத்திற்கும் முன்னோடியாக ஆளும் திமுக அரசு,  எதிர்கட்சியின் கோட்டை என அழைக்கப்படும் தென்மாவட்டங்களில் இன்று தொடங்கியிருப்பதோ மிகப்பெரும் "இனக்கலவரம்". இதைதான் நடக்கக்கூடாது என நாம் அனைவரும் நினைத்திருந்தோம், நான்கூட முந்தைய கடிதங்களில் குறிப்பிட்டிருந்தேன்.... ஆனாலும் "அது" நடந்துவிடுமோ என என்னும்வகையில் சமீபத்திய சம்பவங்கள் அமைந்துள்ளன.

தாழ்த்தப்பட்ட மக்களின் தென்தமிழகத்து  கட்சியுடன் இன்றைய எதிர்க்கட்சி கூட்டணி சேர்ந்த நாள் முதல் கிலியடைந்துள்ள ஆளும் திமுக அரசு எதையாவது செய்து இந்த கூட்டணியை முறிக்க முயன்று அது பலன்தராத போது துவங்கியிருக்கும் மிகபெரும் பாதகச்செயல்தான் மீண்டும் ஒரு "இனக்கலவரம்".

ஒரு கொலைபாதக செயலுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு,  கோவை மத்திய சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவந்த ஒரு சமூக விரோதியை அவசர அவசரமாக விடுதலைசெய்து, அந்த சமூக விரோதிமூலம் தென்னகத்தில் மிகப்பெரிய   இனக்கலவரத்தை நடத்திட முயலும் ஆளும் திமுக அரசின் எண்ணம் ஈடேற நாம் அனுமதிக்கலாமா? அப்படி ஒரு இனக்கலவரம் நடத்தால் வாக்குகள் பிரியும், அதன்மூலம் தாங்கள் தேர்தலில் வெற்றிவாகை சூடிவிடலாம் என நினைத்து ஆளும் திமுக அரசு முயலும் முயற்சிக்கு நம் இனம் மீண்டும் ஒரு கருவியாக்கப்பட்டிருக்கிறது.

ராமநாதபுரத்திலும், சங்கரன்கோவிலுக்கருகிலும் நடந்துள்ள சமீபத்திய நிகழ்வுகள் அமைதியை விரும்பும் நம்மக்களின்மீது மீண்டும் ஒரு "இனக்கலவரத்தை" தூண்டுவது போலேயே அமைந்துள்ளது. இந்தநேரத்தில் வீரத்தை சற்று குறைத்து விவேகத்திற்கு முன்னுரிமை கொடுப்பதுதான் நாம் அனைவரும் செய்யவேண்டிய கடமை. தேர்தல்வரும் வரை நாம்கடைபிடிக்கும் பொறுமைதான் அடுத்த ஐந்து ஆண்டுகால தேவரினத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும் என்பதை உணர்ந்து நம் மக்கள் அனைவரையும் உணர்ச்சிவசப்படாமல் அமைதி காத்திட செய்வது, நம் ஒவ்வொருவருடைய கடமை என்பதை மீண்டும் வலியுறுத்தி இந்தக் கடிதத்தை நிறைவு செய்கிறேன்.  நன்றி

பாசத்துடன்... அண்ணன்

No comments:

Post a Comment