thevarji

thevarji

Saturday, October 2, 2010

அண்ணனின் கடிதம் (4)

பாசத்திற்குரிய தம்பி, தங்கைகளே,
சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு உங்களை இந்த கடிதம் மூலம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். தேசியச்செம்மல் தேவர்  திருமகனாரின்  ஜெயந்தி விழா நெருங்கி வரும் இநேரத்தில் உங்களிடம் சில கருத்துகளை பகிர்ந்து கொள்வதில் ஏற்படும் மனநிறைவைவிட வேறு எதுவும் இருக்கமுடியுமா என்ன?

வரப்போகும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து, சமீபகாலமாக தென் தமிழகத்தில் சிலர் இனக்கலவரங்களுக்கு வித்திட்டு வருகிறார்கள். அவர்களை அடையாளம் கண்டுகொண்டு விழிப்புணர்வோடு இருப்பது நமது கடமை. சில "ஜாதிக்" கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல் தமில்புலவரின் பெயர்கொண்ட பத்திரிக்கை போன்ற கலகமூட்டும் சில பத்திரிக்கைகளும் பல்வேறு வழியில் ஒரு இனக்கலவரத்திற்கு தூபமிடுவதை நாம் கண்கூடாக காணமுடிகிறது. 

இந்தநேரத்தில் நாம் அனைவரும் பொறுமையாகவும், அதே சமயம் புத்திசாலித்தனமாகவும் நடந்துகொள்ளவேண்டும். கலவரநெருப்பிலே குளிர்காய விரும்புகிறவர்களின் எண்ணங்கள் ஈடேற நாம் என்றும்  காரணமாகிவிடக் கூடாது.

பசும்பொன் தேவர் திருமகனாரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்கவேண்டும் என்ற நமது நெடுநாளைய கோரிக்கையை அரசு பரிசீலிப்பதாக கூறிவிட்டு, இன்று வேறு ஒரு இனத்தின் வாக்குகளை கருதி பின்வாங்குவது கடும் கண்டனத்திற்குரியது. குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயலும் சில "ஜாதித்"தலைவர்கள் அவர்களின் "ஜாதித்" தலைவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்கவேண்டும் என்று விதண்டாவாதம் செய்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் எத்தனையோ நல்ல தியாகசீலர்கள் அவர்களின் இனத்திலும் பிறந்திருந்தாலும், ஒரு குறிப்பிட்ட ஜாதிவெறிகொண்ட ஒருவரின் பெயரை நம் தேசியத்தலைவர் பசும்பொன் தேவர் திருமகனார் அவர்களின் பெயருக்கு போட்டியாக இந்த ஜாதிக்கட்சி தலைவர்கள் கூறக்காரணம் என்ன? ஒரே வார்த்தையில் பதில் சொல்வதென்றால்  "அவர்கள் மீண்டும் ஒரு கொடிய இனக் கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் பெற விரும்புகிறார்கள்".   

இங்கே நாம் அனைவரும் செய்ய வேண்டியது யாதெனில், பொறுமையுடனும் அதே வேளை   மிகுந்த கவனமுடனும் செயல்பட்டு, அரசியல் வியாபாரிகள் சிலர் எதிர்பார்க்கும் இனக்கலவரங்களை முளையிலே கிள்ளிட உறுதி கொள்வோம்.

இந்தக்கடிதத்தை முடிக்கும் முன், இறுதியாக ஒரு கோரிக்கையை உங்களிடம் வைக்க விரும்புகிறேன். வரும் தேர்தலில், ஆளும் கட்சி அல்லது எதிர் கட்சி என்ற இரண்டில் ஒன்றைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருப்பதால்,  சிலநாட்களாகவே ஒரு குழப்பம் நிலவி வருகிறது. தென்மாவட்டத்தை சேர்ந்த பல இனக்கலவரங்களுக்கு காரணமான ஒரு "ஜாதிக்" கட்சி தற்போதைய எதிர்கட்சிக் கூட்டணியில் இடம் பெற்று இருப்பதால், நம்மவர்களின் மன நிலையில் ஒரு மாற்றத்தைக் காண முடிகிறது. ஒன்றை மட்டும் மனதில் எண்ணிக் கொள்ளுங்கள், அதாவது முதுகில் தடவி கொடுத்துக் கொண்டே கத்தியை சொருகும் இன்றைய ஆளும் கட்சியின் தலைமையைவிட, சொன்னதைச்செய்யும் எதிர்க்  கட்சியின் தலைமை எவ்வளவோ மேல். இதையெல்லாம்  நன்கு மனதில் நினைத்து என்றும் எப்போதும் போல் உங்கள் ஆதரவை நல்கிடுங்கள். ஒரு குடும்பத்தின் "மக்களே" ஆளும் ஆட்சி மறைந்து உண்மையான மக்களாட்சி மலர்ந்திட உறுதி கொள்வோம்.

பாசத்துடன் .... அண்ணன்

No comments:

Post a Comment