thevarji

thevarji

Monday, August 23, 2010

அண்ணனின் கடிதம் 03

பாசத்திற்குரிய தம்பி, தங்கைகளே!

உங்கள் அனைவருக்கும் அண்ணனின் அன்பான வணக்கங்கள். இந்த கடிதத்தின் மூலமாக மீண்டும் ஒருமுறை உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சில விரும்பத்தகாத நிகழ்வுகளை நீங்கள் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள். அவைகளில் முக்கியமான ஒன்றை இங்கே உங்களுக்கு விளக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

அசோக்குமார் (இனியன்) என்ற சட்டக்கல்லூரி மாணவரை தமிழக காவல் துறையினர் சித்திரவதை செய்து தாக்கியதையும் அதன்பின் அந்த மாணவர் மருத்துவமனியில் சேர்க்கபட்டதையும், அங்கிருந்து வெளியேறி அவர் தற்கொலைக்கு முயன்றதையும் பல ஊடகங்களில் நீங்கள் படித்திருப்பீர்கள். இந்த கொடும்செயலுக்கு தமிழக காவல்துறை சொன்ன காரணத்தையும், அந்த காரணத்தை பத்திரிக்கைகள் பலவாறு திரித்து எழுதியிருந்ததையும் கூட நீங்கள் படித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். இங்கே உங்கள் மனங்களை அறிந்தவனாக சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

சம்பந்தப்பட்ட மாணவர் படிக்கும் அதே சென்னை சட்டக்கல்லூரியில் கடந்த காலத்தில் நடந்த மிக மோசமான தாக்குதல்களையும், அதை நம் தமிழக காவல்துறை வேடிக்கை பார்த்ததையும் உலகமே கண்டு களித்ததை நீங்கள் எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறன். அந்தத் தாக்குதல்களில் நம் தேவரினத்தை சேர்ந்த சில மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டார்கள் என்பதையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

தமிழ்சமுதாயத்தின் அவலங்களை துணிச்சலுடன் எதிர்த்து குரல்கொடுப்பதொடு, ஆளும் அதிகார வர்க்கத்தை கண்டு இம்மியளவும் அஞ்சாமல் எந்தவொரு போராட்டத்தையும் துணிச்சலுடன் எடுத்துச் செல்லும் தமிழக வக்கீல்களையும், சட்டக் கல்லூரி மாணவர்களையும் பிரித்தாளும் பொருட்டு சில தீய சக்திகள் மேற்கொண்ட சதிச் செயல்தான் மாணவர் தம்மில் நடைபெற்ற மோதல்களின் காரணம் என்பதை உங்களுக்கு இங்கே விளக்கிட கடமைப்பட்டிருக்கிறேன். சரி, தற்போதைய பிரச்சினைக்கு வருகிறேன்... எதிரியில் ஒருவன் ஒழிந்தான் என எண்ணிவிடாமல், நம் தோழன் ஒருவனுக்கு ஆளும் அதிகாரவர்க்கத்தால் பெரும் கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது என்ற கண்ணோட்டத்திலேயே நீங்கள் இந்தப் பிரச்சினையை காணவேண்டும் என்பது எனது வேண்டுகோள். ஏனென்றால் இதுபோன்ற கொடும் செயல்களை காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் முதுகுளத்தூரிலும் பல தென் மாவட்டங்களிலும் நம் இனம் அதிகமாக அனுபவித்து வந்ததை நீங்கள் இன்னும் மறந்திருக்க மாட்டீர்கள் என்றே நினைக்கின்றேன்.

நான் என்றும் கூறுவதைப்போல், தேவரினம் என்பது நிலத்தில் நீதியையும், நேர்மையையும் நிலைநாட்ட தன் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் களம் பல கண்டு வந்ததை நினைவு படுத்தி, சகோதரன் அசோக்குமாருக்கு (இனியன்) நீதி சரியான முறையில் கிடைக்க நம்முடைய பேராதரவை நல்குவதுதான் நமக்கு சிறப்பு என கூறி இந்த கடிதத்தை நிறைவு செய்கிறேன்.

அன்புடன்
அண்ணன்

No comments:

Post a Comment