thevarji

thevarji

Saturday, August 14, 2010

அண்ணனின் கடிதம் 02

பாசத்திற்குரிய தம்பி, தங்கைகளே!

உங்கள் அனைவருக்கும் அண்ணனின் அன்பான வணக்கங்கள். இந்த கடிதத்தின் மூலமாக உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். நான் முன்பே கூறியது போன்று தேவரினம் என்பது சத்தியத்தையும், நீதியையும், நேர்மையையும் காக்கும் பொருட்டு தன் இன்னுயிரையும் பொருட்படுத்தாது களங்கள் பல கண்டு வந்துள்ள வீரமிக்க இனம்.

மேற்கூறிய சத்தியம், நீதி, நேர்மை போன்றவைகளுக்கு யார் குந்தகம் விளைவித்தாலும் அவர்களை நேர் நின்று எதிர்த்திட நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அதே சமயம், இந்த சத்தியம், நீதி, நேர்மையை காப்பவர்களுக்கு நாம் தோள் கொடுக்கவும் கடமைபட்டிருக்கிறோம் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

தமிழகக் காவல்துறையில் ஒரு கேடுகெட்ட கும்பலின் முகமூடியை கிழிக்கும் பொருட்டு பெருமுயற்சி எடுத்துவரும் தோழர் "சவுக்கு" , தோழர் வழக்கறிஞர் புகழேந்தி, மற்றும் அவர்களின் நண்பர்கள் அனைவருக்கும் தோள் கொடுக்க திரளும் அன்புத் தமிழ் நெஞ்சங்களோடு, நாமும் இணைந்து குரல் கொடுக்கக் கடமைப் பட்டிருக்கிறோம் என்பதை உங்களுக்கு நினைவு படுத்தவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

சமுதாயத்தில் மிகுந்த அக்கறை கொண்டு, தோழர் சவுக்கு அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மதம், இனம், குலம், கோத்திரம் இவைகளையெல்லாம் ஒதுக்கித்தள்ளிவிட்டு, ஒன்றுபட்ட தமிழினம் என்ற உணர்வோடு  நாம் தோழர் சவுக்கு, வழக்கறிஞர் புகழேந்தி, மற்றும் அவர்களின் நண்பர்களுடன், துணை நிற்பதோடு,  வரும் தேர்தலில் இவைகளையெல்லாம் எதிரொலிக்கச் செய்வோம் என இன்றே உறுதிமொழி எடுப்போம்.

அன்புடன்
அண்ணன்

1 comment:

  1. annan solvathu sarithaan. Savukku Vs jaffer sait mikavum kavanikkappada vendiya visayam. naam anaivarum savukku pakkam thunai nirpom.

    ReplyDelete