thevarji

thevarji

Thursday, May 19, 2016

மீண்டும் சூரியனை சுட்டெரித்த சுடர் விளக்கு - புரட்சிப்புயல் வைகோ


தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன .. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றி பெற்று வெற்றிக்கொண்டாட்டங்கள் தமிழகமெங்கும் ஏன் உலகெங்கும் நடந்து வருகின்றன. இத்தகைய மாபெரும் வெற்றியை அதிமுக பெற பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான காரணம் அண்ணன் வைகோ அவர்கள்தான் என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரிந்த உண்மை. 


2001ல் திமுக தோற்று அதிமுக வெற்றி பெற அண்ணன் வைகோதான் காரணம் என்பதையும், தேர்தலுக்குப்பின் "சூரியனைச் சுட்டெரித்த சுடர்விளக்கு" என மக்களால் கொண்டாடப்பட்டவர் அண்ணன் வைகோ அவர்கள்தான் என்பதும் அனைவரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அதுபோல்,  2011ல் கடைசிநேரம் வரை அதிமுகவின் பிரசார பீரங்கி போல் மேடையெங்கும் முழங்கி திமுகவின் 2ஜி ஊழலை உலகெங்கும் மக்களிடையே எடுத்துசென்று பிரபலபடுத்தி கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறவேண்டிய சூழ்நிலையில் தேர்தலை புறக்கணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாலும், மீண்டுமொருமுறை சூரியனைச் சுட்டெரித்தார் அண்ணன் வைகோ. ஆம், திமுக படுதோல்வி அடைந்தது. 

இதோ நடந்து முடிந்த 2016 சட்டப்பேரவை தேர்தலிலும், எதிர்கட்சியான திமுகதான் ஆட்சிக்கு வரும் என்ற மிகைபடுத்தப்பட்ட ஒரு எதிர்பார்ப்பை முறியடித்து அதிமுகவே மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற மிகப்பெரிய காரணாமாக இருந்தது அண்ணன் வைகோ அவர்கள்தான் என்றால் மிகையாகாது. தேமுதிகவை மக்கள் நல கூட்டணிக்கு கொண்டுபோனதிலிருந்தே திமுக தொண்டர்களையும் அனுதாபிகளையும் சொர்வடையச்செய்த்து, நிறைய தொகுதிகளில் திமுக வெற்றிவாய்ப்பை இழக்க காரணமாயிருந்தது அண்ணன் வைகோவும் அவரால் உருவாக்கப்பட்ட மூன்றாவது அணியுமே என்றால் மிகையாகாது. அரசியலில் நேர்மை! பொதுவாழ்வில் தூய்மை! லட்சியத்தில் உறுதி! என சூரியனை மீண்டும் ஒருமுறை சுட்டெரித்துவிட்டு சுடர்விளக்காய் பிரகாசித்துக்கொண்டிருக்கிறார் புரட்சிப்புயல் அண்ணன் வைகோ.

Thursday, April 28, 2016

தேவர் புகழ் பாடிவரும் வானம்பாடி - அண்ணன் வைகோஅன்பிற்கினிய சகோதர சகோதரிகளே !
சில தினங்களுக்கு முன் கோவில்பட்டியில் தேவர் திருமகன் சிலைக்கு மாலையிட சென்ற மறுமலர்ச்சி திராவிட கழகத்தின் பொதுச்செயலாளரும், மக்கள் நல கூட்டணியின் ஒருங்கினைப்பாளரும், உலகெங்கும் வாழும் தமிழினத்தின் தன்னலமற்ற ஒரு சில தலைவர்களில் ஒருவரும், எக்குலமும் போற்றும் முக்குலத்தின் தேவர் திருமகனின் பெருமைகளை செல்லுமிடமெல்லாம் சிறப்புடன் புகழ் பாடி வரும் வானம்பாடியுமான முக்குலத்தின் தத்துப்பிள்ளை அருமை அண்ணன் வைகோ அவர்களுக்கு சில சமூக விரோத கும்பலால் ஏற்படுத்தப்பட்ட தடையும், விளைவிக்கப்பட்ட மன உளைச்சலும் முக்குலத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியே. 

இது போன்ற தருணத்தில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து அண்ணன் வைகோ அவர்களுக்கு ஆதரவாக இருப்பதே தேவரையாவிர்க்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.

இதே வலைபக்கத்தில் தேவர் ஜெயந்தி அன்று அண்ணன் வைகோ அவர்கள் பேசியதை கேட்டீர்களானால், 'தேவர் புகழ் பாடிவரும் வானம்பாடி' அண்ணன் வைகோதான் என்பதை நீங்களும் சொல்வீர்கள்.

தேர்தலில் வாக்களிப்பது அவரவர் உரிமை. இருந்தாலும், தேவர் திருமகனார் எதிர்த்த காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் தவிர்த்து அந்தந்த தொகுதியில் போட்டியிடும் அணைத்து கட்சிகளையும் சேர்ந்த நல்லவர்களுக்கும், சிங்கம் சின்னத்தில் போட்டியிடும் நமது முக்குலத்து வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 

அதே சமயம் வாக்கு சேகரித்து உங்கள் பகுதிக்கு வருகை தரும் அண்ணன் வைகோ அவர்களுக்கு சிறப்பான வரவேற்பை நல்குவது நமது கடமை என்பதை மறந்து விடவேண்டாம். 

அன்புடன் 
அண்ணன் 


Saturday, April 23, 2016

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சிவகாசி தொகுதி வெற்றி வேட்பாளர்

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சிவகாசி தொகுதி வெற்றி வேட்பாளர் Dr.வா.மகாராஜன், வழக்கறிஞர் (நேதாஜி சுபாஷ் சேனை, நிறுவனர் - தலைவர்)அவர்களுக்கு தேவரின் வெற்றி சின்னமாம் சிங்கம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி இனமான சொந்தங்களையும் அனைத்து நல் உள்ளங்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
ஒருங்கிணைந்த தேவர் பேரவை 

மும்பையில் நமது மராட்டிய மாநில தேவர் முன்னேற்ற பேரவையின் முப்பெறும் விழா
மும்பையில் நமது மராட்டிய மாநில தேவர் முன்னேற்ற பேரவையின் முப்பெறும் விழா வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
தமிழகத்தில் இருந்து
ஸ்ரீதர் வாண்டையார்,
திரு.கருணாஸ்,
திரு ஸ்ரீவை சுரேஷ்தேவர்,
வழக்கறிஞர் திரு.வி.மகாராஜன்,
திரு.அவணி நடராஜன்,
ஜல்லி கட்டு தலைவர் பி.ராஜசேகர், திருமதி கிரேசி கருணாஷ்,நெல்லை பாஷா பாய், சென்னை தொழிலதிபர் எம்.மாரிமுத்து தேவர் மற்றும் உள்ளுர் மும்பை மாநகர மேயர்,எம்.பி.திரு.ராகுல் ஷெவாலே மேலும் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

நம்பியவர்களை பழிவாங்கிய அதிமுகவை தோற்கடிப்போம் சிங்கக்கூட்டணி சூளுரை

நம்பியவர்களை பழிவாங்கிய அதிமுகவை தோற்கடிப்போம் சிங்கக்கூட்டணி சூளுரை

பதிவு செய்த நேரம்:2016-04-23 10:40:29


உசிலம்பட்டி,: நம்பியவர்களை வஞ்சம் வைத்து பழிவாங்கிய அதிமுகவை தோற்கடிப்போம் என, சிங்கக்கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கதிரவன் எம்எல்ஏ பேசினார். உசிலம்பட்டியில் சிங்கக்கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் கதிரவன், மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன், மறத்தமிழர் சேணை புதுமலர் பிரபாகரன், தேசிய மறுமலர்ச்சி இயக்கம் செந்தூர்பாண்டியன், தீ கட்சி ராஜாமறவன், நேதாஜிசேணை மகாராஜன், சென்னைவாழ் முக்குலத்தோர் பாசறை ஜாக்குவார் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் டாக்டர் சேதுராமன் பேசுகையில், ‘‘கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே அதிமுக நம்மை ஏமாற்றி கொண்டிருக்கிறது என்று சொன்னேன். நமது தொண்டர்கள் நம்பவில்லை. ஆனாலும் ஜெயலலிதா அம்மையாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்களால்தான் இந்த சிங்கக்கூட்டணி உருவானது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சிங்கம் சின்னத்தில் அமுக்கிற அமுக்குல அதலபாதாளத்திற்கு அதிமுக போகணும்’’ என்றார்.

கதிரவன் பேசுகையில், ‘‘அதிமுக எங்களை வெளியேற்றவில்லை. சிங்கம் சின்னத்தை தவிர்த்து இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட சொன்னதால்தான் வெளியேறினோம். நம்பியவர்களை வஞ்சம் வைத்து பழிவாங்கும் அதிமுகவை கண்டிப்பாக தோற்கடிப்போம்’’ என்றார். கூட்டத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் நிர்வாகிகள் சுகுமாறன், பாஸ்கரராஜ்பாண்டியன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ரவி, மலைச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Thursday, January 23, 2014

புலித்தேவன் பிறந்த நாள் விழாவில் வைகோ உரை - 2008

வெள்ளையர்களிடம்        அடிமைப்பட்டுக்          கிடந்த         இந்தியாவில் முதன்முறையாக அவர்களை   எதிர்த்துப் போராடிய தேவர் குல  மாவீரன்
THEVAR.1
புலித்தேவன். அவர் ஒரு தமிழன் என்பது ஒட்டுமொத்த தமிழர்களும் பெருமைப்பட வேண்டிய விசயம். மேலும் அவர் ஒரு தேவன் என்பதும் அவருடைய ரத்தம் நமது உடம்பில் ஓடுகிறது என்பது ஒவ்வொரு தேவனுக்கும் பெருமை. இதோ, அந்த மாவீரனைப் பற்றி ம.தி.மு.க தலைவர் திரு.வைகோ அவர்களின் உரை.
பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் வைகோ உரை: (18.10.2008)

வானமேசாயினும் மானமே பேணிடும்
மறக்குல மன்னன் நான்
அன்னியனுக்கு அடிபணிவனோ?
உயிரே போயினும் உரிமை காப்பேன்
கூற்றமே சீறினும்
இக்கொற்றவன் கலங்கேன்
நெஞ்சுரம் கொண்டோர் உறையும்
நெற்கட்டான் செவல் நிமிர்ந்தே நிற்கும்
என முழங்கிய வீரவேந்தர் பூலித்தேவருக்கு இன்று விழா.

மாமன்னர் பூலித்தேவருக்கு புகழ் அஞ்சலி தொடுக்க ஏற்ற இடம் வாசுதேவநல்லூர் என்று சிவகங்கையில் விழா நடந்தவேளையில் நான் நம் பெரு மதிப்புக்குரிய சேதுராமன் அவர்களிடத்தில் தெரிவித்தேன். சிவகங்கையில் மருதுபாண்டியர்களுக்கு மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் மருத்துவர் சேதுராமன் அவர்கள் பெருவிழா நடத்தினார்கள். அன்றும் கருமேகங்கள் குவிந்துகிடந்தன. பெருமழையும் பெய்யத் தொடங்கியது.

அந்தச் சிவகங்கை சீமையில் திரண்டு இருந்த மக்கள் மத்தியில் மருது பாண்டியர்களின் தியாகத்தை அவர்களின் வீரஞ்செறிந்த வரலாற்றை ஒரு கடமை உணர்வோடு இந்த மண்ணில் வாழும் தலைமுறைக்கும் வளரும் தலைமுறைக்கும் வரப்போகும் தலைமுறைக்கும் நமது முன்னோர்கள் செய்த தியாகம் தெரியவேண்டும் என்பதற்காக அந்த நிகழ்ச்சியில் நான் உரையாற்றினேன். அதைப் போலவே சரித்திரப் புகழ்பெற்ற வாசுதேவநல்லூரில் மாநாட்டைப்போல இந்த நிகழ்ச்சியை அற்புதமாக ஏற்பாடு செய்து அதில் உரையாற்றுகின்ற உன்னதமான சந்தர்ப்பத்தையும் தந்திருக்கின்ற அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்திற்கும் அதனுடைய மதிப்புமிக்க தலைவர் மருத்துவர் சேதுராமன் அவர்களுக்கும் மனம்நிறைந்த நன்றியைத் தெரிவிப்பது எனது கடமையாகும்.

சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதுதான் அக்டோபர் திங்கள் ஆகும். இந்த மாதத்தில்தான் 7 ஆம் தேதியன்று தூக்குக்கயிற்றைத் தாவி அணைத்து வரவேற்று மரணத்தை எதிர்கொண்ட பகத்சிங் பிறந்தான். அவனது நூற்றாண்டு நிறைவு விழாவை தலைநகர் சென்னையில் நான் முன்னின்று நடத்தினேன்.

அதே உணர்வோடுதான் இன்றைக்கு வாசுதேவநல்லூரில் இந்த நாட்டின் விடுதலை வரலாற்றில் முதன் முதலாக வெள்ளையரின் படைகளைச் சிதறடித்து வாளுயர்த்திய பெருவேந்தன் பூலித்தேவர் என்ற உணர்வோடு, அவர் உலவிய இடத்தில் – அவர் படை நடத்திய இடத்தில் – அவருடைய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்ட பகுதியில் – அவர் எழுப்பிய கோட்டையில் பாய்ந்த பீரங்கிக் குண்டுகளுக்கு அஞ்சாது வீரமறவர்கள் போராடிய பகுதியில் – இன்றைக்கு உரையாற்றக்கூடிய ஒருவாய்ப்பைப்பெற்று நிற்கிறேன்.

ஒரு நெடியவரலாறு காத்தப்ப பூலித்தேவனுக்கு இருக்கிறது. எனக்குத்தெரிய சரித்திரத்தில் 630 ஆண்டுகளுக்கு முன்னால் வரலாற்றுக் குறிப்பு சுவடுகளின் அடிப்படையில் 1378 ஆம் ஆண்டு வரகு™ராம சிந்தாமணி பூலித்தேவர் தொடங்கி சரியாக இன்றைக்கு 630 ஆண்டுகள் ஆகின்றன. அவர்கள் வழிவழி ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு பெயர் சூட்டுகிறபோது பாட்டனின் பெயரை பேரனுக்குச் சூட்டுகிற வழக்கம் நம் நாட்டில் இருக்கின்ற காரணத்தால் காத்தப்ப பூலித்தேவன் என்ற பெயர் தொடர்ந்து மூன்றுமுறை பேரனுக்குப் பேரனுக்குப் பேரனுக்கு என்றுவந்து நான்காவது பெயராக 1715 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி பிறந்த மாமன்னன் பூலித்தேவர் என்று வரலாறு மகுடம் சூட்டுகின்ற பெயர் நாம் யாருக்காக விழா நடத்துகிறோமோ அவருக்கு சூட்டப்பட்டது. காத்தப்ப பூலித்தேவர் என்ற பெயர்.

இன்றைக்கு 300 ஆவது ஆண்டு நெருங்கப்போகிறது. 1715; 2015 வந்தால் 300 ஆண்டுகள். பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா தொடங்கி இருக்கின்ற நேரத்தில் – தேவர் திருமகனாரின் நூற்றாண்டு நிறைவு பெறப்போகின்ற நேரத்தில் – 300 ஆவது ஆண்டு விழாவையும் இயற்கை அன்னை உயிரோடு இருக்க அனுமதிக்குமானால் அது வரப்போகின்ற 2015 ஆம் ஆண்டில் 300 ஆவதுஆண்டு விழாவை இந்த மண்டலம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தைப் பதிவு செய்கிறேன்.

ஆனால், அந்த மன்னருக்கு விழா எடுக்க வேண்டும் என்று விரும்புவதற்குக் காரணம் நான் உலகத்தின் யுத்தகளங்களை ஆர்வத்தோடு படிப்பவன். உலகத்தின் மகாபெரிய வீரர்களின் போர்க்களக் காட்சிகளை நான் விருப்பத்தோடு படிப்பவன். சின்னவயதில் இருந்தே என் உணர்வு அதுதான். நான் சிறுவனாக பள்ளியில் படிக்கிறபோதும் நான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் எழுதிய வியாசர் விருந்தைப் படிப்பதற்கு முன்பு பெரிய எழுத்து மகாபாரதத்தை மழைவரவேண்டும் என்பதற்காக ஊர் மடத்திலே விராட பருவம் வாசிக்கின்ற அந்தக் காலத்தில் நான் சின்னஞ்சிறுவனாக மகாபாரதத்தைப் படிக்கிற போது என் மனம்கவர்ந்த காட்சி அந்த 13 ஆம் போர்சருக்கம். அபிமன்யு வதைக்காட்சிதான். அதைப்போல, கம்பனின் இராமாயணத்தில் என் உள்ளம் கவர்ந்த காட்சி நிகும்பலை வேள்வி சிதைக்கப்பட்டபோது களத்தில் போராடிய இந்திரஜித்தின் வீரக்காட்சிதான். இது என் உணர்வு.

அதே உணர்வோடு, உலகத்தில் எங்கெல்லாம் வீரபோர்க்களங்கள் நடைபெற்று இருக்கிறது என்று சரித்திர ஏடுகளைத் தேடிப்படிக்கின்ற வழக்கம் உண்டு. அப்படிப் படித்ததில் மனதைக் கவர்ந்த இடம் தான் தெர்மாப்பிளே போர்க்களம். 300 வீரர்கள் இலட்சம் வீரர்களைத் திகைக்கவைத்த அந்த வீரப்போர்க் களம்.

அந்தவகையில் இந்த மண் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ்க்குடியின் வரிசையில், 1715 ஆம் ஆண்டு பிறந்து 11 வயதிலேயே, அரியணைக்கு வரநேர்ந்த சின்னஞ்சிறு பிள்ளையாக வர நேர்ந்த மாவீரன்தான் காத்தப்ப பூலித்தேவன். அவர் சித்திரபுத்திர தேவருக்கும் சிவஞான நாச்சியாருக் கும் பிள்ளையாக பிறந்து நடத்தியிருக்கின்ற போர்க் களங்களைப் பார்த்தேன். அவருடைய வீரத்தை, படைகளை வகுக்கக்கூடிய திறமையை எதிரிகளை சின்னாபின்னமாக்கக்கூடிய ஆற்றலை அவருடைய போர்முறையை, படித்தபோது நான் திகைத்துப்போனேன். அப்படிப்பட்ட பூலித்தேவர் வரலாற்றை இந்த மண்ணில் பதிவுசெய்ய வேண்டும் என்பதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன். இது ஏற்ற இடம்.

பக்கத்தில் நெற்கட்டான்செவல். இந்தப் பகுதி வளம் நிறைந்த பகுதி. 1767 இல் கடைசியாக வெள்ளையர்களின் கொடுமையால் உடன் இருந்தவர்கள் துரோகத்தால் மன்னர் பூலியின் படை வீழ்ந்ததற்குப்பிறகு இந்தப் பகுதியை அழிக்க வேண்டும் என்று நினைக்காத டொனல்டு காம்பல் ஆஹா, வளம் குவிந்துகிடக்கிறது வாசுதேவநல்லூர் பகுதி மரகதப் பச்சையைப்போல எங்கு கண்டாலும் கழனிகள் செழித்துக் கிடக்கின்றன. கரும்புத் தோட்டங்களும், செந்நெல் வயல்களும், வாழைத்தோப்பு களும் குவிந்து இருக்கின்ற வளம் நிறைந்த இந்தப்பகுதியை அழிக்க எனக்கு மனமில்லை என்று சொன்னானே. அந்தப் பகுதிக்கு ஏன் நெற்கட்டான்செவல் என்று பெயர் வந்தது என நான் பார்த்தேன்.

நெல்விளைகிற காரணத்தால், நெல்லை கட்டுகட்டாக கட்டிச்செல்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால், எனக்குக்கிடைத்த குறிப்பு இது. சிவந்த நிலம். வீரமறவர்கள் சிந்திய இரத்தத்தாலும் சிவந்த நிலம். இயற்கையிலேயே செம்மண் பூமி. அதில் நெல்கட்டான் என்கின்ற ஒரு செடி அதிகமாக இருந்தது என்றும் அந்த நெல்கட்டான் செடியை நினைவூட்டி நெல்கட்டும்செவல் என்று பெயர் வந்தது என்று சொல்லப் படித்து இருக்கிறேன்.

இந்த வாசுதேவநல்லூர் கோட்டைக்கு ஈடான கோட்டை எதுவும் இல்லை என்றும் பரங்கியர் சொன்னார்கள். இது தென்னாட்டில் இருக்கின்ற மற்றக் கோட்டைகளைவிட, அபூர்வமான கோட்டை. பொறியியல் நுட்பத்தோடு கட்டப்பட்டு இருக்கின்ற கோட்டை. அந்தக் கோட்டையின் நீளம் 650 கெஜம். அகலம் 300 கெஜம். கோட்டையின் அடிமட்டத்தின் அகலம் 15 அடி. உச்சியின் அகலம் 5 அடி. கோட்டையின் மூலைகளில் கொத்தளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்தக் கொத்தளங்களுக் குள்ளே நிலவறைகளைப்போல – வீரர்கள் உள்ளே இருந்து சண்டை செய்வதற்கு ஏற்ற அமைப்புகள் இருந்தன. வெளியே இருந்து பார்த்தால் வீரர்கள் இருப்பது தெரியாது. அதில் அமைக்கப்பட்டு இருந்த துவாரங்கள் வழியாக அவர்கள் ஆயுதங்களை ஏவக்கூடிய அமைப்பு இருந்தது. அப்படிப்பட்ட கோட்டை. பதநீரும், கருப்பட்டியும், கம்பப் பசையும் மற்றும் பல்வேறு பொருட்களையும் கொண்டு அமைத்த மிகச்சிறந்த கோட்டை. பீரங்கிக் குண்டுகளுக்கு ஈடுகொடுத்த கோட்டை.

1755 ஆம் ஆண்டு வெள்ளைக்காரன் கர்னல் ஹீரான் ஆர்க்காடு நவாப்பின் துணையோடு அப்பொழுது மாபூஸ் கானையும் துணைக்கு அழைத்துக்கொண்டு களக்காட்டுக் கோட்டையைக் கைப்பற்றினார்கள். களக்காட்டுக் கோட்டை வீழ்ந்தது. அப்போது வாசுதேவநல்லூரில் இருந்த பூலித்தேவருக்கு களக்காடு ஏன் வீழ்ந்தது என்று நினைத்தார். மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்தார். அப்பொழுதுதான் அவர் முதன்முதலாக ஒரு கூட்டணியை உருவாக்குகிறார். கூட்டமைப்பை உருவாக்குகிறார்.

எதிரியை வெள்ளைக்காரனை எதிர்க்க நாம் அணிசேர வேண்டும் என்று நினைத்து எதிரியாக அதற்குமுன் இருந்த திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் கொடுத்து திருவிதாங்கூர் மன்னரையும் உடன் சேர்த்துக்கொண்டார். அவர் அமைத்த அந்தக் கூட்டமைப்பில் சேத்தூர் சேர்ந்தது – கொல்ல கொண்டான் சேர்ந்தது – தலைவன்கோட்டை சேர்ந்தது – நடுவக்குறிச்சி சேர்ந்தது – சொக்கம்பட்டி என்று அழைக்கப்படுகின்ற வடகரை சேர்ந்தது – சுரண்டை சேர்ந்தது – ஊர்க்காடு சேர்ந்தது – ஊத்துமலை சேர்ந்தது. இத்தனையும் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை மன்னர் பூலித்தேவர் ஏற்படுத்தினார். இந்தக் கூட்டமைப்பை வைத்துக்கொண்டு வெள்ளையன் படைகளை சிதறடித்தார்.

அவருடைய காந்தசக்தி மகத்தானது. ஆர்க்காட்டு நவாப்பின் படையில்வந்த மூன்று இஸ்லாமிய தளபதிகள் முடேமியா எனும் முகம்மது மியானச், மியானோ எனும் முகம்மது பார்க்கி, நபிகான் கட்டாக் ஆகிய மூன்று தளகர்த்தர்கள் மன்னர் பூலித்தேவர் முகத்தைக்கண்டு அவரால் கவரப்பட்டு அவரது படையில் சேர்ந்தார்கள். சேர்ந்து வீரப்போர் புரிந்தார்கள். 12 மாதம்கழித்து 1756 மார்ச் 21 இல் திருநெல்வேலியில் மீண்டும் போர் நடத்தி வெள்ளையரை தோற்கடித்தார், மன்னர் பூலித்தேவன். அந்தப் போரில் இÞலாமியனாகப் பிறந்து ஆர்க்காடு நவாப்புக்குப் பக்கத்தில் இருந்து மன்னர் பூலித்தேவர் படைக்கு வந்துசேர்ந்த முடேமியா என்கின்ற இÞலாமியத் தளபதியின் மார்பில் குண்டு பாய்ந்து இரத்த வெள்ளத்தில் அவன் புரண்டு கொண்டிருந்த வேளையில் மன்னர் பூலித்தேவருக்குத் தகவல் கிடைத்து ஓடிச்சென்று முடேமியாவை எடுத்து மடியிலே கிடத்தி இந்த மண்ணில் அந்நியனை எதிர்த்து வீரப்போர் புரிந்த தங்கமே! உன் ஆவி பிரிகிற வேளையில் உன் மேனியின் இரத்தம் என் மடியில் பாய்கிறது என்று உச்சி மோந்து அவனை அரவணைத்துக் கொண்டார். மன்னா, நான் கடமையாற்றி விட்டுத்தான் மடிகிறேன் என்று முடேமியா இறந்துபோனான். இஸ்லாமியக் குலத்தில் பிறந்து தன்னோடு வந்து படையிலே சேர்ந்து போரிலே உயிர் விட்டவனுக்கு நடுகல் எழுப்பினார் பூலித்தேவன். அவருடைய பணிகள் அளப்பரிய பணிகள்.
    223133_197865886933209_100001293985842_529505_2375378_n
பூலித்தேவர் தோற்றம் ஆறடி உயரம் இருக்கும். இரும்புபோன்ற தேகம். ஒளிவீசும் கண்கள். பகைவருக்கு அஞ்சாத உள்ளம். நட்புக்குத் தலைவணங்குகின்ற பண்பாளன். அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டார். குதிரையில்லா விட்டாலும் 40 கல் தொலைவு வேகமாக நடக்கக்கூடிய ஆற்றல் இருந்தது என்றும் வீரர்கள் தொடர்ந்து ஓடித்தான் வரவேண்டும் என்றும் அவரைப்பற்றி நாட்டுப்பாடல் சொல்கிறது. 40 கல் தொலைவும் அயர்வின்றி ஒரு குதிரையின் ஓட்டத்தில் நடக்கக்கூடிய ஆற்றல் மன்னர் பூலிக்கு இருந்தது என்று நாட்டுப்பாடல்கள் தெரிவிக்கின்றன.

அப்படிப்பட்ட மன்னனை அதற்குப்பிறகு எவனும் வெல்லமுடியாது என்றவகையில் அவர் அமைத்தது தான் முதல் கூட்டமைப்பு. இப்பொழுது தேர்தல்களில் கூட்டணி வருகின்றன. ஒரு பொது எதிரியை வீழ்த்துவதற்கு ஒன்றுசேர வேண்டும் என்ற எண்ணத்தைப் போர்க்களத்தில் இந்தியாவில் முதன் முதலாக ஏற்படுத்தியவரே பூலித்தேவர்தான். இது வரலாறு. அவருடைய உயர்ந்த மதிநுட்பம். ஆகவே தான், அவர் இதை அமைத்தபிறகு இராமநாதபுரம், சிவகங்கை சீமையில் சிவகங்கை மன்னர்கள் பூலித்தேவரை முன்மாதிரியாகக் கொண்டு கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.

அந்தக் கூட்டமைப்பில் அங்கே இராமநாதபுரம் மேலப்பனும், முத்துகருப்பத் தேவரும், சிவகிரி மாப்பிள்ளை வன்னியரும், மதுரைக் கள்ளர்களும் அதில் – அந்தக் கூட்டமைப்பில் சேர்ந்தார்கள். அதையடுத்து பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு கூட்டமைப்பு. அந்தக் கூட்டமைப்பு கட்டபொம்மனும் – கோலார்பட்டி ஜமீனும் – நாகலாபுரம் பாளையமும் குளத்தூர் பாளையமும் சேர்ந்து அவர்கள் ஒரு கூட்டமைப்பு அமைத்தார்கள். நான்காவது கூட்டமைப்பாக கள்ளர் நாட்டு மன்னர்களை ஒருங்கிணைத்து விருபாட்சி மன்னர் கோபால் நாயக்கர் திண்டுக்கல்லை மையமாகக்கொண்டு வெள்ளையனை எதிர்த்துப் போர்புரிந்தார். ஐந்தாவது கூட்டமைப்பாக மலபார் கோயம்புத்தூரை மையமாக வைத்து கேரளா வர்மா தலைமையில் ஒரு கூட்டமைப்பு உருவாயிற்று.

இது தென்னாட்டுப் போர்க்களங்களின் வரலாறு. இதற்கு அகரம் எழுதியவர் பூலித்தேவன். பிள்ளையார் சுழிபோட்டவர் பூலித்தேவன். அந்த உணர்வு அவருக்கு இருந்த காரணத்தினால் அவரை எவராலும் வெல்லமுடியாது. அவரை வெல்ல வேண்டும் என்று வந்தவன் யார் தெரியுமா?
     image
அவன் கம்மந்தான் கான்சாகிப். அவன் பிரிட்டிக்ஷ் படையில் இருந்தவன். பிரிட்டிக்ஷ் படையில் படைத்தளபதியாக இருந்து பல போர்க்களங்களில் வெற்றிபெற்றிருக்கிறான். அவனுடைய வீரம் நிகரற்றதுதான். காரணம், ஹைதர் அலியைத் தோற்கடித்தான். திப்பு சுல்தானின் தகப்பன் மைசூர் புலி என்று அழைக்கப்பட்ட திப்புசுல்தானின் தகப்பன் ஹைதர் அலியைப் போர்க்களத்தில் தோற்கடித்த கம்மந்தான் கான்சாகிப் தெற்கே வந்தான். வாசுதேவநல்லூரில் ஒரு மன்னன் இருக்கிறான் பூலித்தேவன். அவனை எவராலும் வெற்றிபெற முடியவில்லை என்று பிரிட்டிக்ஷ்காரன் அவனுக்குத் துணையாக நாகப்பட்டினத்தில் இருந்து படை – திருச்சியில் இருந்து படை – தூத்துக்குடியில் இருந்து படை – பாளையங்கோட்டையில் இருந்து படை – மதுரையில் இருந்து படை – திருவனந்தபுரத்தில் இருந்து மன்னன் அஞ்செங்கோவின் படை இவ்வளவு படைகளும் வாசுதேவநல்லூரை நோக்கிவந்தது.

இங்கே மலையடிவாரத்தில் கம்மந்தான் கான்சாகிப் அந்தப் பெரும் படைகளைக் கொண்டு வந்து முகாம் அமைத்தான். இந்தப் பாளையத்துக்கு மாமன்னர் பூலித் தேவருடைய ஆளுமைக்குரிய அரசின் எல்லை எது தெரியுமா? அவர் நெற்கட்டுஞ் செவல் பாளையத்துக்கு எல்லை கிழக்கே குவளைக்கண்ணி. மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை. தெற்கே முத்துக்குளம் சிவகிரிக்குப் பக்கத்தில். வடக்கே தலைவன் கோட்டை. இதுதான் அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்டசட்டப்பூர்வமான பகுதியாக முதலில் இருந்தது.

அப்படிப்பட்ட நிலையில் கான்சாகிப் இவ்வளவு படைகளையும் கொண்டுவந்து வெற்றி பெற்றுவிடலாம் என்று 1759 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி வாசுதேவநல்லூர் கோட்டையையும், நெற்கட்டுஞ் செவல் கோட்டையையும் தாக்கவேண்டும் என்று படைப் பிரிவுகளோடு வந்தான். 1759 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கிய யுத்தம் டிசம்பர் 26 ஆம்தேதிவரை நடந்தது. அவன் வெற்றி பெறுவான் என்று பிரிட்டிக்ஷ்காரன் நினைத்தான். ஹைதர் அலியையேத் தோற்கடித்தவன் ஆயிற்றே. சூராதி சூரனாயிற்றே என்று நினைத்தார்கள். அப்படி நினைத்த அந்தப் போரில் கான்சாகிப் தோற்றான்.

பூலித்தேவன் வெற்றிபெற்றான். பீரங்கிகளும், துப்பாக்கிகளும் கொண்ட இத்தனை படைகளை வெள்ளைக்காரன் கொண்டுவந்து பெரும்படையோடு தாக்கி ஏறத்தாழ ஒருமாதகாலம் நடைபெற்ற முதல் யுத்தத்தில் பூலித்தேவன் வெற்றிபெற்றான். கான்சாகிப் தோற்கடிக்கப்பட்டான். புறமுதுகிட்டு ஓடினான். ஏன் அவனைப்பற்றிச் சொல்கிறேன் என்றால் அவனுடைய மனத்துணிவையும் நான் அறிவேன்.

காரணம், அதே கான்சாகிப் பிரிட்டிக்ஷ்காரனை எதிர்த்தான். மதுரைக்கு நானே அரசன் என்றான். கும்பினிக்கு கட்டுப்பட முடியாது என்றான். வெள்ளைக்காரனை எதிர்த்தான். பிரெஞ்சுக்காரனோடு உடன்பாடு வைத்தான். கடைசியில் அவன் அவனுடைய படையில் இருந்து துரோகம்செய்து பிரிட்டிக்ஷ்காரனோடு போய்ச்சேர்ந்த பிரெஞ்ச் தளபதி மார்ச்சந்த் திரும்பவந்து நான் உன்னோடு திரும்பச் சேர்கிறேன் செய்தது தவறுதான் என்று திரும்பவும்சேர்ந்தான். வடக்கே நடந்த சண்டைகளில் சில வெற்றிகளை கான்சாகிப்புக்குத் தேடிக்கொடுத்தான் மார்க்சந்த்.

ஒருமுறை துரோகம் செய்தவன் எப்பொழுதும் துரோகம் செய்வான் என்பதை நான் வரலாற்றில் படித்திருக்கிறேன். அதே மார்க்சந்த்தான் பிரிட்டிக்ஷ்காரன் பெரும்தனம் கொடுத்து அவனைச் சரி கட்டியதால் மீண்டும் துரோகியானான். தொழுகை நடத்துகின்ற வேளையில் கம்மந்தான் கான்சாகிப்பை சிப்பாய்கள் பலர் பாய்ந்துசென்று கைதுசெய்தார்கள். கான்சாகிப் கையில் வாள்கிடையாது. அவனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது மதுரையில் அவனைத் தூக்கில் போடுகிறபோது முடிந்தது கதை, கயிறு கழுத்தை இறுக்கிவிட்டது இறந்தான் இனிசவம்தான் என்று போய்ப்பார்த்து கயிற்றை அவிழ்த்து கீழேபோட்டார்கள். துள்ளிவிழுந்து உட்கார்ந்தான். மூச்சை அடக்குகின்ற பயிற்சி பெற்றிருந்தான்.
    303114_172242162855167_100002081540289_342042_1052968513_n

முதல்தடவை அவனைத் தூக்கில்போட்டு அவன் சாகவில்லை. இரண்டாவது முறையும் அதேமுறையில் தூக்கில் போட்டார்கள் அவன் சாகவில்லை. மூன்றாவது முறை இரும்புக் குண்டுகளைக் காலில்கட்டி தூக்கில் போட்டார்கள் அப்பொழுது இறந்தான். அவன் உடம்பைத் துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் புதைத்தார்கள். அப்படிப்பட்ட கம்மந்தான் கான்சாகிப் தோற்றது யாரிடம் என்று சொன்னால் மாமன்னர் பூலித்தேவனிடத்தில். அந்த யுத்தத்தை பூலித்தேவர் நடத்தியதே ஈடில்லா சாகசமாகும். இப்போரில் கான்சாகிப்பின் பீரங்கிகள் வாசுதேவநல்லூர் கோட்டையை தகர்த்தெறிய பன்முறை முயன்றன – தோற்றன – கடைசியில் வாசுதேவநல்லூர் முற்றுகை ஆரம்பமாயிற்று. இதில் இருமுனைத் தாக்குதலை பூலித்தேவர் நடத்தினார்.

நெற்கட்டும் செவலிலிருந்து வந்த கும்பினிப் படையை வாசுதேவநல்லூர் கோட்டைக்கு எதிர்ப்புறத்தில் இருந்து பூலித்தேவர் தாக்கினார். கோட்டைக்குள் இருந்த வீரமறவர்கள் கும்பினிப் படையைத் தாக்கினார்கள். இருதரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம். இறுதியில் பூலித்தேவர் வென்றார். கான்சாகிப் தோற்றுப்பின் வாங்கினான்.

1759 ஆம் ஆண்டு தோற்று ஓடிய கான்சாகிப் மீண்டும் இரண்டாவது முறையாக 12 மாதம் கழித்து 1760 ஆம் ஆண்டு அதே டிசம்பர் மாதம் வந்தான். இந்துÞதானத்தில் பிரிட்டிக்ஷ் அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளின் வரலாறு என்ற புத்தகத்தை ராபர்ட் ஓர்ம் எழுதினார். முதல் பதிப்பு 1764 இல் வெளிவந்தது. பூலித்தேவரின் வாசுதேவநல்லூர் போர்க்களங்களுக்கு இந்நூலே மூலஆதாரம். இந்நூல் மூன்று வால்யூம்களைக் (தொகுப்புகள்) கொண்டது. மொத்தம் 1291 பக்கங்களை உடையது. தமிழ்நாடு ஆவணக் காப்பக நூலகத்தில் இந்த நூல் உள்ளது. இந்நூலின் முதல் தொகுப்பில் 15 இடங்களிலும் இரண்டாம் தொகுப்பில் 12 இடங்களிலும் பூலித்தேவர் பற்றியும், மூன்றாம் தொகுப்பில் 3 இடங்களிலும் பூலித்தேவன் கோட்டை குறித்தும் செய்திகள் உள்ளன.

இரண்டாம் முறையாக கான்சாகிப் 1760 டிசம்பர் 12 இல் திருநெல்வேலியில் இருந்து பெரும்படையுடன் வந்து நெல்கட்டும் செவலில் இருந்து மூன்று கல் தொலைவில் உள்ள மலையடிவாரத்தில் முகாம் போட்டான் 1760 டிசம்பர் 20 இல் போர் தொடங்கியது. வீரமறவர்கள் நூறுபேர் மடிந்தார்கள். பூலித்தேவரே இம்முறையும் வென்றார். கான்சாகிப் தோற்றான்.

மூன்றாம் முறையாக கான்சாகிப் 1761 மேமாதத்தில் மீண்டும் பெருமளவில் கும்பினிப் படைகளுடன், பீரங்கிகளுடன் போர் தொடுத்தான். மே 3 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி முடிந்தது போர். இப் போரில்தான் பூலித்தேவர் தோற்றார். வாசுதேவநல்லூர் கோட்டை, பனையூர் கோட்டை, நெற்கட்டும் செவல் கோட்டைகள் வீழ்ந்தன. கான்சாகிப்பும் பின்னர் வெள்ளையரை எதிர்த்து மதுரையில் தளம் அமைத்தான். வீரத்தில் சிம்மமான பூலித்தேவர் ஆலய வழிபாட்டில் சிறந்து கோவில் திருப்பணிகள் பலவற்றை செய்தார்.

அவர் கட்டிய ஆலயங்கள் பலப்பல. சங்கரன்கோவில் கோவிலுக்கு சபாபதி மண்டபம் கட்டியவர் பூலித்தேவன்தான். அங்கே தெப்பக்குளம் வெட்டியவர் பூலித்தேவன். கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ணநாதர் ஆலயத்துக்கு முன்மண்டபம் கட்டியவர் பூலித்தேவன். அந்த ஆலயத்துக்குத் திருத்தேர் செய்தவர் பூலித்தேவன். வெள்ளி ஆசனங்களை அமைத்தவர் பூலித்தேவன். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூலஸ்தானத்து அம்மனுக்கு தங்க நகைகள், வைர அட்டிகைகள் செய்துவைத்தவர் பூலித்தேவன். இங்கே பக்கத்தில் இருக்கக்கூடிய தாருகாபுரத்தில் 16 கால் மண்டபத்தைக் கட்டி அன்னதானம் செய்தவர் பூலித்தேவன். அதுமட்டுமல்ல, சீவலப்பேரி மருகால் தலையில் பூலுடையார் கோவில் மண்டபம் கட்டியவர் பூலித்தேவன். அங்கே நெல்லையில் வாகையம்மன் கோவிலை கட்டிவைத்தவர் பூலித்தேவன்.

இத்தனைக் கோவில்களையும் கட்டி – இத்தனைத் திருப்பணிகளையும் செய்து மக்களை அரவணைத்து மக்கள் வாழ்வு செழிப்பதற்கு பாடுபட்டு அனைவரையும் சகோதரர்களாக ஏற்றுக் கொண்டதனால்தான் நான் இந்தக் கருத்தை வலியுறுத்தவிரும்புகிறேன். எந்த மாபூஸ்கான் ஆர்க்காடு நவாப்பின் தம்பி எதிர்த்து வந்தானோ அவன் பூலித்தேவனிடத்தில் வந்து நான் உங்கள் நண்பனாக அரண்மனையில் இருக்கிறேன் என்றான். அவர் ஏற்றுக் கொண்டார். இந்த அரண்மனையில் நீண்டநாட்களாக மாபூஸ்கான் இருந்தான்.
   311733_181479121932120_100002101005467_384660_656899445_n
இதெல்லாம் சரித்திரம் தோழர்களே, நான் ஆதாரம் இல்லாமல் பேசமாட்டேன். இதை நான் பேசுகிறபோது ஒலிநாடாவில் ஒளிநாடாவில் பதிவுசெய்யப்படும் என்ற உணர்வோடு பேசுகிறேன். இந்தப்பேச்சு ஒரு வரலாற்றுச் சுவடாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பேசுகிறேன். ஏனென்றால் ஏராளமான தம்பிகள், இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். இந்தத் தம்பிகளின் உள்ளத்தில் வீரஉணர்ச்சியும், மானஉணர்ச்சியும் அவர்கள் உள்ளங்களில் பொங்கவேண்டும் என்பதற்காகத்தான் இங்கே வந்திருக்கின்ற தம்பிகள் இடத்தில் உன்னுடைய பாட்டன், முப்பாட்டன் எல்லாம் போராடி இருப்பான் பூலித்தேவன் படையில். அவன் எல்லாம் வாளெடுத்து இருப்பான். அவன் எல்லாம் பீரங்கிக்கு எதிரே போய்நின்று இருப்பான். அவர்களுடைய பேரப்பிள்ளைகள்தான் நீங்கள். அந்த உணர்ச்சியைப் பெறவேண்டும் என்பதற்காக நான் இதைப்பேசுகிறேன்.

காரணம், பிரெஞ்சு நாட்டுத் தளபதி டியூப்ளே. அவன் மிகப்பெரிய தளபதி இராபர்ட் கிளைவ்வோடு போரிட்டவன். சந்தர்ப்பவசத்தால் தோற்றுப்போனவன். பாண்டிச்சேரியைக் கைப்பற்றியவன். அந்தப் பாண்டிச்சேரியை பிரெஞ்சின் காலனியாக்கிய டியூப்ளேயின் மொழிபெயர்ப்பாளர்தான் துபாஸ் ஆனந்தரங்கம்பிள்ளை. அவர் நாட்குறிப்பு எழுதியிருக்கிறார்.

ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரி. சரித்திரப் புகழ்பெற்ற டைரி. எப்பொழுது 1736 செப்டம்பர் 6 இல் தொடங்க 1761 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வரை டைரி எழுதி இருக்கிறார். அந்த டைரி ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. அந்த டைரியில் அவர் 11 பாகங்கள். 11 ஆவது பாகத்தில் மன்னர் பூலித்தேவரைப்பற்றி எழுதுகிறார். அப்பொழுது சொல்கிறார். இவரது பண்பாட்டை மாபூஸ்கான் என்பவன் மன்னர் அரண்மனையில் இருந்து அவன் விடைபெற்றுப் போகிறபோது அவனது பட்டுச் சட்டையும், பொன்னாபரணங்களையும் அவனுடைய கைவசம் இருந்த பொன்னையும், பொருளையும் பாதுகாப்பாக வைத்துவிட்டுப்போனான்.

இதை இங்கேயிருந்து அனுப்பிவைக்கிறார் பூலித்தேவன். அவர் இதை எழுதுகிறார். ஒரு தேதியைக் குறிப்பிட்டு 1757 ஆம் ஆண்டில் டிசம்பர் 21 தேதியைக் குறிப்பிட்டு பூலித்தேவன் அரண்மனையில் இருந்து பொன்னும் பொருளும் பட்டாடைகளும் திருவண்ணாமலை கம்மந்தானிடம் ஒப்படைக்கப் பட்டது என்று செய்தி கிடைத்திருக்கிறது என்று டைரியில் எழுதுகிறார். விலைமதிப்பற்ற பொருள்கள் அனைத்தையும் பத்திரமாக அனுப்பி வைத்தார் பூலித்தேவர் என்பது அவரது நேர்மை நாணயத்துக்கு வரலாற்றுச் சான்றாகும்.

வெள்ளைக்காரன் எழுதுகிறான். 18 அடி நீளமுள்ள ஈட்டியை வாசுதேவநல்லூர் மறவர்கள் பயன்படுத்தினார்கள். நெற்கட்டுஞ்செவல் மறவர்கள் பயன்படுத்தினார்கள். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. 18 அடி நீளமுள்ள ஈட்டியை எப்படி அவர்கள் பயன்படுத்தினார்கள் என்று எனக்கே வியப்பாக உள்ளது. இங்கே இருக்கின்ற மக்கள் ஒவ்வொருவரும் எந்த நேரத்திலும் கையில் வாளும், வளைதடியும், கேடயமும் பக்கத்தில் வைத்திருப்பார்கள் என்று எழுதுகிறான் வெள்ளைக்காரன்.
    395379_180604332047372_100002934186163_313207_1747209814_n

   
இந்தச் செய்தி அரண்மனைக்கு வருகிறது. அரசர் பூலித்தேவனின் காதுக்கு வருகிறது. கலகலவென்று சிரிக்கிறான், அப்பொழுது பக்கத்தில் நிற்கிறான் ஒண்டிவீரன். அரசனே, நான் போய் முடித்து வருகிறேன். இந்தச் சபதத்தை நிறைவேற்றி வருகிறேன் என்று இவன் கும்பினியாரிடம் போகிறான். தந்திரமாகப் போகிறான். நயமாகப் பேசுகிறான். அங்கு சிலவேலைகளைச் செய்கிறான். அந்த முகாமில் சேர்த்துக் கொள்கிறார்கள். தக்க நேரம் பார்த்தான். பட்டத்து குதிரை கட்டப்பட்டு இருக்கிற இடத்தில் இருந்து அந்தக் கயிற்றை அவிழ்த்தான். குதிரையைக்கொண்டு அமாவாசை இருட்டில் இரவோடு இரவாக கொண்டுவந்துவிடலாம் நெற்கட்டுஞ்செவலுக்கு என்று கொண்டுவருகிற போது குதிரை மிரண்டுவிட்டது.

குதிரை மிரண்ட சத்தத்தைக்கேட்டு கும்பினிப் படையினர் ஓடிவந்துவிட்டார்கள். ஓடி வந்தவுடன் இவன் என்ன செய்தான் தெரியுமா? குதிரையை விட்டுவிட்டு அங்கே இருக்கக்கூடிய புல்லை எடுத்து மேலேபோட்டு அந்தப் புல்லுக்குள் படுத்துக் கொண்டான். தேடிவந்த காவலர்கள் என்ன குதிரை கட்டுத் தறியைவிட்டு ஓடிவந்து இருக்கிறதே என்று குதிரையின் கயிற்றைபிடித்து சரி இதைக்கொண்டுபோய் லாயத்தில் கட்டவேண்டாம். இங்கேயே கட்டிவிடுவோம் என்று அங்கே முளையை அடிக்கிறார்கள். முளை உள்ளே இறங்குகிறது. முளை அடிக்கிற இடத்தில் படுத்துக்கிடக்கின்றான் ஒண்டிவீரன்.

இப்படி அனைவரையும் அரவணைத்து யுத்தகளத்தில் நின்று சாகசங்கள் புரிந்தவர்தான் பூலித்தேவர். ஆறு ஆண்டுகள் கழிந்தன. 1767 ஆம் ஆண்டு மீண்டும் போர் – கடைசிப் போர். டொனல்டு காம்பெல் பெரும் பீரங்கிகளோடு வந்தான். அப்பொழுது அவன் சொல்கிறான். அந்தச் சண்டையில்தான் அனந்த நாராயணன் துரோகத்தால் பூலித்தேவர் தோற்றதாக சரித்திரம் சொல்கிறது. காம்பெல் எழுதுகிறான். நினைத்தேப் பார்க்கமுடியாது. பீரங்கிகளின் குண்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. கோட்டைத் தகரவில்லை. கோட்டையின் சுவர்களில் ஓட்டைகள் விழுந்தன.

ஆனால், அந்த மறவர்கள் அந்த ஓட்டைகளை அடைப்பதற்கு அவர்கள் பனை ஓலைகளையும், ஈரமண்ணையும் கொண்டுவந்து அந்த ஓட்டைகளை அடைத்தார்கள் என்று எழுதுகிறான். இந்த வீரத்தை எங்கும் பார்த்தது இல்லை. மறவர்கள் சிலரின் உடலைப் பீரங்கிகுண்டுகள் துண்டு துண்டாகவும் சின்னாபின்னமாகவும் சிதறவைத்தன. குண்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. பக்கத்தில் நிற்பவன் செத்து விழுகிறான். அதைப்பற்றிக் கவலைப்படாமல் அந்த இடத்தின் சிதிலமான பகுதிகளை செப்பனிடுவதில் பனை ஓலைகளையும், ஈரமண்ணையும் கொண்டுவந்து அந்த ஓட்டைகளை அடைப்பதிலே உறுதியாக இருக்கக்கூடிய வீரர்களை இந்த உலகத்தில் எங்கே பார்க்க முடியும். வாசுதேவநல்லூரில் தான் பார்க்க முடிந்தது என்று எழுதுகிறான்.
    527432_302789473123912_100001785853642_702133_376215151_n
இந்தத் திருநெல்வேலி சரித்திரத்தை மிக முறையாக எழுதியவர் திராவிட மொழிகளில் ஒப்பிலக்கணம் எழுதிய இன்றைக்கு இடையன்குடியில் அடக்கம் செய்யப்பட்டு கல்லறையில் துயிலும் கால்டு வெல். திருநெல்வேலி சரித்திரம் எழுதி இருக்கிறார். அதில் பூலித்தேவனைப் பற்றிச் சொல்கிறார். “இந்த மேற்கத்திய பாளையக்காரர்கள் மத்தியில் உயர்ந்த இடத்துக்கு வந்தவர்தான் பூலித்தேவன். அவர் படைபலம் குறைவாக இருந்தாலும் பண்பால், வீரத்தால், திறமையால் அவருடைய ஆளுமைக்கு உட்பட்ட இடத்தைவிட செல்வாக்கும் புகழும் பெற்றார்” என்று எழுதுகிறார்.

இதற்குப்பின்னர் போரில் பூலித்தேவர் படை தோற்றபின் கடைசியாக அவரைக் கைதுசெய்து கொண்டு செல்கிறபோதுதான் சங்கரன்கோவில் ஆலயத்துக்குள் நான் வழிபட்டு வருகிறேன் என்று உள்ளே போனார் பூலித்தேவர். அவர் இறைவனைப்பாடிய பாடல்கூட இருக்கிறது. பூலித்தேவன் பாடிய பாடல்கூட இருக்கிறது. அருமையான பாடல். சிவனை நினைத்துப் பாடிய பாடல்.
இதோ அந்தப் பாடலைச் சொல்கிறேன்.
பூங்கமலத்தயன் மால் அறியா உமைசங்கரனே
புகலக் கேண்மின்
தீங்குபுரி மூவாலிச வினையே – சிக்கி
உழறும் அடியேன் தன்னை
ஓங்கையில் சூழ் உலகமதில் உனை அன்றி
எனைக்காக்க ஒருவருண்டோ
ஈங்கெழுந் தருள்புரியும் இன்பவாருதியே
இறைவனே போற்றி போற்றி
அதற்குப்பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அருட்பெருஞ்சோதி மறைந்ததைப்போல சங்கரன்கோவில் கோவிலுக்குள் போனவர் திரும்பவில்லை. நேதாஜியின் மரணத்தைப்போல பூலித்தேவரின் மறைவும் இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

அன்புக்கு உரியவர்களே, இதைப்பேசக்கூடிய தகுதி அடியேனுக்கு உண்டு என்பதற்குக் காரணம் 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி கழுகுமலைக்குத் தெற்கே இருக்கின்ற சிதம்பரபுரம் என்கின்ற மறவர் சீமையில் தென்னாட்டில் முதன்முதலாக பூலித்தேவருக்கு சிலை அமைத்தவன் இந்த வைகோ. நானும், என் தம்பியும் சொந்தச் செலவில் மண்டபம் கட்டினோம். நானும், என் தம்பி ரவிச்சந்திரனும் சேர்ந்து பூலித்தேவருக்கும், பசும்பொன் தேவர் திருமகனுக்கும் இரண்டு சிலைகளை எழுப்பினோம். மண்டபம் அமைத்து தமிழ்நாட்டில் முதல் சிலை அமைத்தவன் இந்த மேடையில் நின்று கொண்டு இருக்கக்கூடிய வைகோ.

அந்த மண்டபத்திறப்பு விழா மாலையில் நடைபெற்றது. அந்த மண்டபத்தைத் திறந்து வைத்துவிட்டு அந்த இரவோடு இரவாக நான் சென்னைக்குச் சென்றேன். அந்த இரவில்தான் என்னுடைய தம்பி விடுதலைப்புலிகளை வீட்டில் வைத்திருக்கிறான் என்று அதே இரவில்தான் கைது செய்யப்பட்டான். நான் இதை இங்கே நினைவூட்டுவதற்குக் காரணம் எந்த வீரத்தை மதிக்கிறோமோ மண்ணின் மானம்காக்க அந்தப் பூலித்தேவரின் வடிவமாகத்தான் நான் ஈழத்துப் பிள்ளைகளைப் பார்க்கிறேன். ஈழத்துப் போர்க்களங்களைப் பார்க்கிறேன்.

இந்தப் பூலித்தேவனின் வழியில்தான் ஈழத்தின் விடுதலைப்புலிகளைப் பார்க்கிறேன். இதைச் சொல்லக்காரணம், மானஉணர்ச்சியும், வீரஉணர்ச்சியும் படைகண்டு அஞ்சாது படை பெருக்கத்தைக் கண்டு அஞ்சாது உயிரைப்பற்றிக் கவலைப்படாது நாட்டின் விடுதலைக்கு முதலாவது அடிமை விலங்கை உடைப்பதற்கு சம்மட்டி ஏந்திய முதல் மன்னன் இந்தியாவிலேயே 1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் என்றும் முதல் சுதந்திரப்போர் என்றும் அழைக்கப்படுவதற்கு நூறு ஆண்டுக்கு முன்னரே போர்புரிந்து வெற்றிகளைக் குவித்தவன்தான் பூலித்தேவர்.

அதன்பின்னர் கொடுமையிலும் கொடுமை என்னவென்று தெரியுமா? மீண்டும் அங்கே ஒரு புதுக்கோட்டை கட்டப்பட்டது. ஒரு கோட்டை அழிந்தபோது பூலித்தேவன் மன்னர் இன்னொரு கோட்டை எழுப்பினார். அதற்குப்பெயர் புதுக்கோட்டை. அந்த புதுக்கோட்டையும் தகர்க்கப்பட்டபோது மன்னர் பூலித்தேவனின் மனைவி கயற்கண்ணி அம்மையாரும், அவரது மூத்தமகள் கோமதிமுத்து தலைவச்சியும், ஆண் பிள்ளைகளில் மூத்தவனாகிய சித்திரகுப்த தேவனும், இரண்டாவது பிள்ளையாகிய சிவஞான பாண்டியனும், பாதுகாப்பாக இருக்கட்டும் என்று மறவர் மக்கள் பனையூருக்குப் பக்கத்தில் காட்டுக்குள் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள்.

துரோகிகள் அடையாளம் காட்டி அவர்கள் இருந்த பகுதிக்கு தீ வைத்தார்கள். மன்னர் பூலித்தேவனின் மனைவி கயற்கண்ணி அம்மையார் தீயில் கருகி இறந்தாள். அந்த இடத்தில் அவர்களைப் பாதுகாத்த கொத்தாளித் தேவரும், இன்னொருவரும் பாய்ந்து சென்று இவர்களைப் பாதுகாக்க முனைந்தார்கள். புதுக்கோட்டை சண்டையைப்பற்றிய நாட்டுப்புறப் பாடல் இருக்கிறது. நான் படித்து இருக்கிறேன். அந்த நாட்டுப்புறப்பாடலில் ஒரு செய்தி.

இந்தச் சம்பவம் நடந்த உடன் சின்னப்பிள்ளையாக இருந்த சித்திரகுப்தத் தேவனை வெள்ளைக்காரன் அழித்துவிடுவான் என்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பாஞ்சாலங்குறிச்சி அரண்மனைக்குக் கொண்டு சென்று வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை ஜெகவீரபாண்டிய கட்டபொம்முதுரை அவன் அரண்மனையில் வைத்து பாதுகாத்து வளர்த்ததாக புதுக்கோட்டை நாட்டுப்புறப்பாடல் செய்தி சொல்கிறது.

ஆகவேதான், மன்னர் பூலித்தேவன் போர்க்களம் அமைத்து அந்த வீரப்போர்கள் நடந்த அதற்குப்பிறகு ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப்பிறகு பாஞ்சாலங்குறிச்சி போர் நிகழ்கிறது. ஆனால், இந்தப் பிள்ளையையும் பாதுகாப்பதற்கு அவர்கள் முன்வந்த செய்தியும் இருக்கிறது. ஆகவே, இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில் இந்த உணர்வுகளை சொல்வதற்குக் காரணம், அன்புக்குரிய இளைஞர்களே, நாட்டின் விடுதலைக்காக வீரப்போர் புரிந்த மன்னர்கள் நம் மண்ணைச் சேர்ந்தவர்கள். இந்தப் பெருமை இந்தியாவில் வேறு எவனுக்கும் கிடையாது.

இந்த மண் வீரம் நிறைந்த மண். மானம் நிறைந்த மண். இந்த மன்னனின் புகழைப் பாடுவது அப்படிப்பட்ட மன்னருக்குப் புகழ் நிலைநாட்டப்பட வேண்டும். சமூகஒற்றுமையை நிலைநாட்டுவோம். மதநல்லிணக்கத்தை பாதுகாத்தவர் பூலித்தேவர்.

வாசுதேவநல்லூரில் அல்லா தெரு என்று ஒரு தெரு இருக்கிறது. காரணம் என்னவென்று தெரியுமா? மாபூஸ்கான் இருந்தபோது இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு என்று பள்ளிவாசலை அமைத்துத்தந்தவர் பூலித்தேவர். வாசுதேவநல்லூரிலும் சரி, நெற்கட்டுஞ்செவலிலும் சரி. வழிபடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் பூலித்தேவன். அவரது படையில் பக்கத்தில் பீர்முகமது சாயுபு இருந்தார். மதநல்லிணக்கமும், சகோதரத்துவமும் இருந்த அந்தப் பண்பாட்டை நிலைநாட்டிய மாமன்னர் புகழ்பாடுவதற்கு இந்த இயற்கையும் ஒத்துழைத்து, மழைக்கும் விடுமுறை கொடுத்து மனம்போல இந்த விழா நடைபெறுவதற்கு ஒத்துழைத்த இயற்கைக்கு நன்றிதெரிவிக்கிறேன்.

வாழ்க மன்னர் பூலித்தேவர் புகழ்!

வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

Thursday, July 14, 2011

தேவர் புகழ் வாழ்க

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மாநகரில், தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரில், ‘நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே’ என உரைக்க ஒரு புலவனால் இயலும்; திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுளையும் எதிர்க்க இயலும் என்ற நக்கீரன் பெருமை பேசுகின்ற இம்மாசிவீதியில், எத்தனையோ கூட்டங்கள் நான் பங்கேற்று இருந்தாலும், இன்றைய நாளில், 2007 அக்டோபர் திங்கள் 30 ஆம் நாளில், தேவர் திருமகனாரின் புகழ் பாடுகின்ற மேடையில் உரை ஆற்றுகின்ற நல்ல வாய்ப்பை வழங்கி இருக்கின்ற பார்வார்டு பிளாக் கட்சிக்கும், நான் மதிக்கும் அருமைச் சகோதரர் சந்தானம் அவர்களுக்கும், என் உளம் நிறைந்த நன்றியைத் தெரிவிப்பது தலையாய கடமை ஆகும்.

எல்லாச் சாலைகளும் பசும்பொன்னை நோக்கி...

இலட்சோப இலட்சம் மக்கள் இன்றைக்குப் பசும்பொன்னில் குவிந்தார்கள். நான் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாலே படித்த, ‘எல்லாச் சாலைகளும் ரோமபுரியை நோக்கி..’ All the roads lead to Rome. என்ற ஆங்கில வரிகளை எண்ணிப் பார்க்கிறேன். இன்றைக்கு நடைபெற்ற நிகழ்ச்சியைப் பார்க்கிறபோது, ‘All the roads lead to Pasumpon. ‘எல்லாச் சாலைகளும் பசும்பொன்னை நோக்கி..’ என்று சொல்கிற அளவுக்கு, இலட்சோப இலட்சம் தமிழ் மக்கள், இன்றைக்குப் பசும்பொன்னில் குவிந்தனர். தேவர் திருமகனாருக்குப் புகழ் மகுடம் சூட்டுவதற்கு, மரியாதை செலுத்துவதற்கு பக்திப் பரவசத்தோடு உலவியதையும் கண்டு, பதவி மகுடங்களைத் தேடாமல், வந்த பதவிகளையும்கூட நாடாமல், அதிகார பீடங்களை அலங்கரிக்காமல், இன்றைக்குச் சரித்திரத்தில் கோடிக்கணக்கான மக்கள் போற்றுகின்ற ஒரு தலைவனாக தேவர் திருமகனார் திகழ்கிறார்!

எனவே, பதவிகள் புகழை நிலைநாட்டாது, நிலைக்கச் செய்யாது. உண்மையும், நேர்மையும், உழைப்பும், தன்னலமற்ற மக்கள் பணியும்தான் நிலைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டான ஒரு தலைவர் தேவர் திருமகனார்!

30 ஆண்டுகளாக..

அவருடைய பெருமை பேசுவது, நமது பாதையைச் சரி செய்வதற்காக! ஜாதி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் தலைவனை மதித்து. 31 ஆவது ஆண்டாக பசும்பொன்னுக்குச் சென்று வந்து இருக்கிறேன். நான் முதன்முதலாக 1974 ஆம் ஆண்டு பசும்பொன்னுக்குச் சென்றேன். அதன்பின்னர் 1976 ஆம் ஆண்டிலும், 2002, 2003 இந்த மூன்று ஆண்டுகள் தவிர்த்து, ஆண்டுதோறும் அக்டோபர்த் திங்கள் 30 ஆம் நாள், பசும்பொன்னுக்குச் சென்று வந்து இருக்கிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன்னாலே நான் பசும்பொன்னுக்குச் சென்று கொண்டு இருந்த காலகட்டத்தில், வேறு அரசியல் தலைவர்கள் எவரும் வராத அந்தக் காலத்தில், வீர மறவர் குல மக்களும், முக்குலத்து சமுதாயத்து மக்களும், தங்கள் குலதெய்வத்தை வழிபடப்போவதைப்போல வந்து கொண்டு இருந்த அந்தக் காலகட்டத்தில், நான் அவர் பிறந்த இடம், வாழ்ந்த இடம், அடக்கமான இடத்துக்குச் சென்றதற்குக் காரணம், நான் தொடக்கத்தில் குறிப்பிட்டதைப்போல, அவர் இலட்சியங்களுக்காக அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய ஒழுக்கம் நிறைந்த தலைவர், தனிமனித ஒழுக்கம் வாய்ந்த தலைவர்; பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்த தலைவர்; விவேகானந்தரைப்போல வாழ்ந்த தலைவர்; வடலூர் வள்ளலாரைப்போல துறவு மனப்பான்மையோடு இயங்கிய தலைவர்; அடக்குமுறைகளுக்கு அஞ்சாத சிங்கமாகத் திகழ்ந்த தலைவர்; ஆகவேதான், அந்தத் தலைவனை மதித்து, அவருக்குப் போற்றுதலும் மரியாதையும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலே சென்று வந்து இருக்கிறேன்.

உரம் பெற..உள்ளம் உறுதி கொள்ள..

எத்தனை சோதனைகள் வந்தாலும் உள்ளத்தில் இருக்கின்ற உரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக, நெஞ்சில் தேங்கி இருக்கக்கூடிய துணிச்சலை வளர்த்துக் கொள்வதற்காக, பசும்பொன் தேவர் திருமகனாரின் திருவிடத்துக்குச் சென்று வந்து இருக்கிறேன். நான் மிகச்சிறிய வயதில், அரைக்கால் சட்டை அணிந்த பள்ளிக்கூட மாணவனாக என்கிராமத்தில் என் பாட்டன் கட்டிய வீட்டில் பசும்பொன் தேவர் திருமகனார் திருவடி படுகிற பேறு பெற்ற வீட்டில் அவரைப்பார்த்தேன்.

எங்கள் வீட்டில் தேவர்

என் தந்தையார் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தார்கள். அப்பொழுது தென்மாவட்டச் சுற்றுப்பயணத்தில் வந்த பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள், என் கிராமத்துக்கு உள்ளே வருகிறபோது, இன்றைக்கு எப்படி வாலிபச் சிங்கங்கள் தேவர் திருமகன் புகழ் பாடுவதற்கு அடிவயிற்றில் இருந்து முழக்கம் எழுப்பி கர்ஜிக்கிறார்களோ, அதேபோல இளஞ்சிங்கங்கள், வாலிபர்கள், ‘தென்னாட்டுச் சிங்கம் வாழ்க, பசும்பொன் தேவர் முத்துராம லிங்கம் வாழ்க’ என்று முழக்கம் எழுப்பிக் கொண்டு வந்தபொழுது, வாலிபச் சிங்கங்கள் அணிவகுத்துவந்த கார்கள், பசும்பொன் தேவர் திருமகன் வந்த அந்தக் கார் என் வீட்டு வாசலுக்கு முன்னாலே நின்றது.

‘தேவர் ஐயா வருகிறார்கள்’ என்று சொன்னவுடன், கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை வீட்டிலே இருப்பவர்களுக்கு!நான் மிகச்சிறிய பையன். என் தந்தையார் அவர்கள் பதட்டத்தோடு, ஒரு பெரிய தலைவர் நம் வீட்டுக்கு வந்து இருக்கிறாரே என அவரை வரவேற்றார்கள். கம்பீரமான உருவம். நல்ல உடல்நலத்தோடு, பொலிவோடு இருந்தார் தேவர்.

இரும்பிடர்த் தலையார் என்று நான், கரிகாலனை வழிநடத்திய மாபெரும் மன்னனை பற்றி புறநாநூற்றில் படித்து இருக்கிறேன். அப்படிப்பட்ட தோற்றத்தோடு, சுருண்ட கேசங்கள் பின்னால் இருக்க, கண்களில் கம்பீரத்தோடு அவர் வந்து அமர்ந்த காட்சி என் நினைவுக்கு வருகிறது. ‘காங்கிரஸ் கட்சியை ஒருகாலத்தில் நான் கட்டிக்காத்து வளர்த்தவன். அது சுயநலக் கூடாரம் ஆகிவிட்டது. நாட்டைக் கேடு செய்து கொண்டு இருக்கிறது. அதை எதிர்க்க வேண்டும் இந்தப் பகுதியில். அதற்காகவே உங்களைச் சந்தித்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப்போகலாம் என் கருத்தை என்று கூற வந்தேன்’ என்று என் தந்தையாரிடம் தேவர் ஐயா தெரிவித்தார்கள்.

‘ஐயா அவர்கள் சொல்கிறபோது, அந்தக் கருத்தை நான் அப்படியே மதித்து நடக்கிறேன்’ என்று என் தந்தையார் சொன்னார். பசும்பால் பருகலாமா? தாங்கள் என தந்தையார் கேட்டார்கள். கொண்டுவரச் சொன்னார்கள். பசும்பாலைப் பருகிவிட்டு அடுத்த இரண்டு நிமிடங்களில் அவர் புறப்பட்டு, எங்கள் ஊர் மந்தையில் போய்ப் பேசினார். நான் அவர் காருக்குப் பின்னாலேயே மந்தை வரை ஓடிச்சென்று, அவரது பேச்சைக் கேட்டேன். ஐந்தாறு நிமிடங்கள்தான் பேசினார். மணியான சொற்கள், வெண்கலக் குரலில் வந்து செவியில் விழுந்தன. அடுத்து கார் போயிற்று. எல்லோரும் காரின் பின்னாலே ஓடிக்கொண்டே இருந்தார்கள்.

சிறையில் கிடந்த சிங்கம்

அன்று என் மனதில் பதிந்த அந்த உருவம், அவரைப்பற்றி நான் அறிந்துகொண்ட செய்திகள், அவர்மீது எனக்கு மதிப்பை ஏற்படுத்திற்று. இந்தத் தெற்குச்சீமையின் மாபெரும் தலைவராக, வங்கத்துச் சிங்கம் நேதாஜிக்கு நிகரான தலைவராக தெற்கே உலவிய தலைவர் தேவர். அவர் பிறந்தது, அக்டோபர் 30, 1938. வாழ்ந்த நாள்கள் 20,075. அதில் 4,000 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடந்தார். தன் வாழ்வில் ஐந்தில் ஒரு பகுதியை சிறையில் கழித்தவர் அந்தத் தென்னாட்டுச் சிங்கம்.

நாட்டின் விடுதலைக்காக, ஆங்கில ஏகாதிபத்யத்தின் பிடரி மயிரைப்பிடித்து உலுக்குகின்றவராக, அடக்குமுறைக்கு அஞ்சாத தீரராக, எந்தச் சிறையில் அவர் அடைக்கப்பட்டு இருந்தாரோ, அங்கே அவர் எப்படிப்பட்ட நெறிகளைக் கடைப்பிடித்தார் என்று நான் அறிந்து இருக்கிறேன், கேட்டு இருக்கிறேன். நான் சிறையில் இருந்தபோது, என் வீரச்சகோதரர்கள் பூமிநாதன், வீர.இளவரசன், செவந்தியப்பன், அழகு சுந்தரம், கணேசனோடு சேர்ந்து, எந்தச் சிறையில் தேவர் திருமகனார் இருந்தாரோ அதே வேலூர் சிறையில் இருக்கின்ற பேறு எங்களுக்குக் கிடைத்ததால், அந்தப் பிறந்த நாளையும் அவரது படத்தைக் கொண்டு வந்து வைத்து, சிறைக்கு உள்ளே நாங்கள் கொண்டாடினோம். அந்தத் தகுதியோடு இங்கே பேசுகிறேன்!

தெரிந்து கொள்ள வேண்டும்

அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் எண்ணிப் பார்த்தால், பிறந்த ஆறு திங்களில் அன்னையை இழந்தார். ஒரு இஸ்லாமியத் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். ஜாதி எல்லைகளைக் கடந்த தலைவர் அவர். ஆகவேதான் தேவர் திருமகனாரைப் பற்றி மாசி வீதியில் பேசவேண்டும் என்பது, ஏதோ வழக்கமாக அல்ல. என் கடமைகளில் ஒன்றாக, எனக்குக் கிடைத்த பேறாகக் கருதி இங்கே நான் பேசிக் கொண்டு இருக்கிறேன். இந்த இளைஞர் சமுதாயம் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகப் பேசுகிறேன்.

அவருக்குப் பத்தொன்பது வயது ஆயிற்று. 1927 ஆம் ஆண்டு, சென்னையில் காங்கிரஸ் மாநாடு. அந்த மாநாட்டுக்குத் தலைமை ஏற்றவர் டாக்டர் அன்சாரி. தேவர் திருமகனார் அரசியலுக்கு உள்ளே அப்போது நுழையவில்லை. அவர் குடும்பம் பெரிய ஜமீன் குடும்பம். எண்ணற்ற கிராமங்கள் அவருடைய கட்டுப்பாட்டில் ஆளுகைக்கு உள்ளே இருந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலபுலங்கள். ‘எனக்குப் பஞ்சுமெத்தை தெரியாது, பட்டுத் தலையணை தெரியாது, பாய்தான் தெரியும்’ என்று சொன்ன தேவர் திருமகன், ஒரு சீமான் வீட்டுப்பிள்ளை. செல்வச் செழிப்புள்ள குடும்பத்து வீட்டில் பிறந்த பிள்ளை. அப்படிப்பட்ட தேவர் திருமகனார், அவருடைய குடும்பத்தில் இருந்த பிணக்குகளால், சிவில் வழக்குகள் தந்தையாரோடு மனத்தாங்கல் ஏற்பட்டது.

சென்னையில் தேவர்

அப்படிப்பட்ட சூழலில், அந்த சிவில் வழக்குகளை நடத்துவதற்காகச் சென்னைக்குச் சென்றார். ‘அம்ஜத் பார்க்’ என்கிற பெயருள்ள மாளிகை. மயிலாப்பூரில், மூன்று ஏக்கர் சுற்றளவு உள்ள மாளிகை. அந்த மாளிகையின் சொந்தக்காரர் சீனிவாச அய்யங்கார். மிகப்பெரிய வழக்கறிஞர். அவரிடம் சென்றார் வாலிபராக இருந்த தேவர்.

‘ஐயா, இந்த வழக்குகளை நடத்த வேண்டும். அதற்காக வந்து இருக்கிறேன்’ என்றவுடன், பெரிய குடும்பத்துப் பிள்ளை அல்லவா? சீனிவாச அய்யங்கார் அவ்வளவு பெரிய மாளிகையில் அவரை வரவேற்று உபசரித்து, ‘நான்கு நாள்கள் காங்கிரஸ் மாநாடு இங்கே நடக்கிறது. அந்த வேலையில் இருக்கிறேன். நான்கு நாள் கழித்து, இந்த வழக்கு விசயங்களை, இந்த ஆவணங்களைப் பார்க்கிறேன்’ என்று சொல்கிறார்.

பிறகு சில நிமிடங்கள் கழித்து அவர் கேட்கிறார், ‘இந்த நான்கு நாள்களும் நீங்கள் இங்கேயே தங்க முடியுமா?’ என்று கேட்கிறார். எதற்காக ஐயா கேட்கிறீர்கள்? என்றார். அந்தக் காலகட்டத்தில் சென்னையில் பெரிய ஓட்டல்கள் கிடையாது. நட்சத்திர ஓட்டல்கள் கிடையாது. விருந்தினர் விடுதிகள் கிடையாது. தலைவர்களை முக்கியமான வீடுகளில்தான் தங்க வைப்பார்கள். நாட்டின் புகழ் வாய்ந்த தலைவர்கள் அவர் காந்தியாராகட்டும், நேருவாகட்டும், திலகராகட்டும் அந்தத் தலைவர்களை எல்லாம், வீடுகளில் தங்கவைப்பார்கள். அது வழக்கம். ‘நான்கு நாட்கள் நான் சொல்கின்ற ஒரு சிறுபணியை, நீங்கள் செய்ய முடியுமா?’ என்று கேட்கிறார். தேவர் திருமகன் ஆங்கிலமும் நன்கு பேச வல்லவர், ‘சொல்லுங்கள் செய்கிறேன்’ என்கிறார்.

தேவர் வாழ்விலே திருப்பம்

‘ஒன்றுமில்லை; வட இந்தியாவில் இருந்து பெரிய தலைவர்கள் வந்து இருக்கிறார்கள். அவர்கள் வீடுகளில் தங்க வைக்கப்படுகிறார்கள். அப்படி ஒரு தலைவருடைய வீட்டில், அவரோடு இருந்து அவரை மாநாட்டுக்கு அழைத்து வரவும், திரும்ப அழைத்துச் செல்லவும், அவருடைய செளகரியங்கள் நன்றாக நடக்கிறதா என்பதை உடனிருந்து கண்காணித்து உதவிசெய்வதற்கும் உங்களால் இயலுமா?’ என்றார். ‘தாராளமாகச் செய்கிறேன், மகிழ்ச்சியாகச் செய்கிறேன்’ என்கிறார். தேவர் வாழ்விலே அதுதான் திருப்பம்.

இந்த விலாசத்தில் இருக்கின்ற வீட்டுக்குச் சென்று, அந்தத் தலைவரிடத்தில் இவரை அறிமுகப்படுத்தி வைத்து, ‘உங்களுக்கு உதவியாக இருப்பார் இந்த இளைஞர்’ என்று சொன்னார். அந்தத் தலைவர்தான் நேதாஜி. இப்படித்தான் உறவு மலர்ந்தது. சந்தர்ப்பங்கள் ஒரு மனிதரின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட திருப்பங்களை ஏற்படுத்துகின்றன பாருங்கள்! நாட்டுக்கு அருட்கொடை அவர்கள் சந்திப்பு. இத்தென்னாட்டுக்கு அருட்கொடை அந்தச் சந்திப்பு.

வங்கத்துச் சிங்கம் நேதாஜி அவர்களுக்கு நான்கு நாட்களும் உறுதுணையாக தேவர் இருந்த அந்தச் சந்திப்புதான், வாழ்நாள் முழுமையும் பிரிக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அப்படித்தான், அவர் பொது வாழ்வுக்கு வருகிறார்.

முதல் மேடை

1933 ஆம் ஆண்டு. விவேகானந்தர் முதலாவது ஆண்டுவிழா என்ற நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக மேடையில் முழங்குகிறார் தேவர் திருமகன். அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் பெயர் சேதுராமன் செட்டியார். இதை நான் குறிப்பிடக் காரணம், இதை மறக்காமல் இருந்து, பிறிதொரு கட்டத்தில் ஒரு தேர்தல் களத்துக்குப் போகிறபோது, ‘சகோதர சகோதரிகளே’ என்று சிகாகோவில் நடைபெற்ற அனைத்து உலக நாடுகளின் சமய மாநாட்டில் முழங்கி, உலக நாடுகளின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினாரே, பரஹம்சரின் தலைமை சீடர் விவேகானந்தர், அவரைப்பற்றிப் பேச தனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த சேதுராமன் செட்டியாரை, ஒரு தேர்தல் களத்தில் தன் சமூகத்தைச் சேர்ந்த மறவர் குலத்தைச் சேர்ந்தவர் போட்டி இடவேண்டும் என்பதற்கான எல்லா வாய்ப்பும் இருந்தபோதும், அதைத் தவிர்த்துவிட்டு, சேதுராமன் செட்டியாரைத் தேர்தல் களத்தில் நிறுத்தி வெற்றி பெற வைத்த பெருமகன்தான் தேவர் திருமகன் என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

களப்போர்

பசும்பொன் தேவர் திருமகனார், அப்போது இருந்த அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்து அரசியல் களத்தில் போராடுகிறார். இங்கே குறிப்பிட்டார்களே, ஆங்கில ஆட்சியாளர்களால் மிகப்பெரிய அடக்கு முறைக்கு ஆளானது முக்குலத்தோர் சமுதாயம். விடுதலை வரலாற்றிலே பிரிட்டிக்ஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்குப் பலியான சமுதாயம். ஒவ்வொரு விதமான அடக்குமுறை இருக்கும்.

ரேகைச் சட்டத்தின் கொடுமை

தென்னாப்பிரிக்காவில் நிற வேற்றுமை அடக்குமுறை, அமெரிக்க நாட்டிலே அண்மைக் காலம்வரை கருப்பர்களுக்கு எதிரான அடக்குமுறை. இந்த நாட்டிலே விதைக்கப்பட்ட வர்ணாசிரமத்தின் காரணமாக நிகழ்த்தப்படு கின்ற, நிகழ்த்தப்பட்ட அடக்குமுறை, அன்றைக்கு முக்குலேத்தோர் சமுதாயத்துக்கு விளைந்த அந்த அடக்குமுறைக்கு என்ன காரணம் என்று கேட்டால், 1897 ஆம் ஆண்டு, 1911 ஆம் ஆண்டு 1923 ஆம் ஆண்டு இந்த மூன்றுமுறையும் குற்றப்பரம்பரைச் சட்டம் திணிக்கப்பட்டது. ரேகைச்சட்டம்.

அந்தச் சட்டத்தின்படி, இவர்கள் எல்லாம் குற்றவாளிகள், இந்த இனத்தில் இந்தக் குடும்பங்களில் பிறந்தவர்கள், இவர்கள் எல்லோரும் குற்றவாளிகள், குற்றம் செய்யக்கூடிய பரம்பரையினர், குற்றப்பரம்பரையினர். ஆகவே, இவர்கள் தங்களது ரேகைகளைக் காவல் நிலையங்களில் போய்ப் பதிவுசெய்து கொள்ள வேண்டும். அதுமட்டும் அல்ல. இரவு 11 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை, காவல்நிலையத்தில்தான் அவர்கள் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும். அவர்களுக்கு நீதியின் கதவுகள் திறக்காது. இந்தக் கொடுமை இந்தியத் துணைக்கண்டத்தில் வேறு எங்காவது உண்டா?

அதனுடைய 10 ஏ பிரிவு மிகக்கொடுமையானது. அதன்படி, ‘நான் ரேகை கொடுக்க மாட்டேன்’ என்று சொன்னால், அதற்கு அபராதமும் போட்டு ஆறு மாதங்கள் சிறையில் தள்ளலாம். இந்தக் கொடிய சட்டத்தை எதிர்த்து, ஜார்ஜ் ஜோசப் என்பவர் முதலாவது தர்ம யுத்தத்தைத் தொடங்கி வைத்தார். அந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்து நடத்தியவர் பசும்பொன் தேவர் திருமகனார்.

அடக்குமுறைக்கு அஞ்சாதே

ரேகைச் சட்டத்தை எதிர்த்துப் போராடுகிறபோதுதான் அவர் சொன்னார்; கொடும் துன்பத்துக்கு ஆளாகி இருக்கின்ற இந்தச் சமூகத்து வீரவாலிபர்களைப் பார்த்துச் சொன்னார்; ‘அடக்குமுறைக்கு அஞ்சாது வாருங்கள், ரேகை புரட்டுவதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம், ரேகை கொடுக்காதீர்கள்’ என்றார். அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டுச் சீறி எழுந்தார்கள் தென்னாட்டில். துப்பாக்கிகளால் அவர்களை மிரட்டமுடியாது என்பதை சரித்திரம் அன்றைக்கே நிரூபித்துக் காட்டியது.

குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தேவர் திருமகனாரின் ஆணைக்கு இணங்கக் களத்தில் குதித்த வாலிபர்கள் மீது பெருங்காநல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்,சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பதினொரு பேர். மீண்டும் துப்பாக்கிச் சூடு. மூன்றுபேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மொத்தம் பதினான்கு பேர் தங்கள் உயிர்களைத் தந்தார்கள்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில், சிவகாசியில், தேவர் திருமகனார்க்கும், காவல்துறை உயர் அதிகாரிக்கும் வாதம் நடக்கிறது. வெள்ளைக்கார அரசாங்கம். அவன் கேட்கிறான். ‘ரேகைச் சட்டத்தை எதிர்த்து நீங்கள் ஏன் போராடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்கிறான்.

அஞ்ச மாட்டேன்

தேவர் அவர்கள் சொல்கிறார்கள்:‘பக்கத்து வீடு பற்றி எரிந்தால் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?’ உடனே அவன், ‘இதற்கு என்ன பொருள்?’ என்கிறான். பக்கத்து வீடு பற்றி எரியும்போது அணைக்காவிட்டால், அடுத்து தன்னுடைய வீடும் தானாக எரியும். இன்றைக்கு இந்த ரேகைச் சட்டம் அப்பாவிகள் மீது பாய்கிறது. நாளைக்கு என் மீதும் பாயாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்று கேட்கிறார்.

இந்த வாதம் நடக்கிறபோது, பெரிய காவல்துறை அதிகாரி வருகிறார். ‘எங்கள் ஏகாதிபத்தியம் உலகத்தில் பல நாடுகளில் பரவி இருக்கிறது. மிக சக்தி வாய்ந்தது. உங்களுக்குத் தெரியுமா?’ என ஆங்கிலத்தில் கேட்கிறான்.
தேவர் திருமகன் ஆங்கிலத்தில் பதில் சொல்கிறார். ‘தெரிவேன் நன்றாகத் தெரிவேன், மேலும் தெரிவேன். இதைவிட எத்தனையோ ஏகாதிபத்தியங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து, புல் முளைத்த சரித்திரமும் நான் அறிவேன்’ என்கிறார்.

எங்கள் பேரரசுக்குக் கடல் போன்ற இராணுவ பலம் இருக்கிறது தெரியுமா? என்கிறான் வெள்ளைக்காரன். உடனே சொல்கிறார் தேவர் திருமகன்: ‘கடல் போன்ற படை இருக்கிறதா? மானத்தைப் பெரிதாகக் கருதுகிறவனுக்கு, சாவு பொருட்டு அல்ல. சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டம் என்பதை நீ தெரிந்து கொள்’ என்கிறார். அவன் கேட்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும், அவனுடைய சொல்லைக் கொண்டே மடக்குகிறார்.

இப்படி அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய தேவர் திருமகனார், தென்னாட்டில் காங்கிரஸ் கட்சியைக் கட்டிக் காத்து வளர்த்தார். தியாகச்சுடர் காமராசர் அவர்களுக்கு அரண் அமைத்துக் கொடுத்தார். இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் தென்னாட்டு மக்கள். தியாக சீலர் பெருந்தலைவர் காமராசர் அவர்களை நான் மதிக்கிறேன். பதவிக்காலத்தில்கூட தனக்கென்று எதையும் சேர்த்துக் கொள்ளாது, தன் தாயைப்பற்றிக்கூட கவனிக்காது வாழ்ந்து மறைந்த உத்தமர்தான் காமராசர். அவரை நான் மதிக்கிறேன்.

காமராசருக்கு உதவி

காமராசர் அவர்களுக்கு அரசியல் அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் நமது தென்னாட்டுச் சிங்கம் தேவர் திருமகனார் என்பதை இங்கே நான் பதிவுசெய்ய விரும்புகிறேன். ஒருகாலகட்டத்தில், விருதுநகரில் காமராசரைத் துன்புறுத்துவதற்கு, இழிபடுத்துவதற்குப் பலர் முனைந்தபோது, அதை உடைத்து எறிந்தவரும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகன்தான் என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

காமராசர் நகர்மன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும். சொத்து வரி கட்டி இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு சொத்து இல்லை. காமராசர் வீட்டுக்குப் போகிறார். அவர் தாயாரிடத்தில் கேட்கிறார். இருக்கிற ஒரு சொத்தை வைத்து வரி செலுத்தலாமா? என்று கேட்கிறபொழுது, ‘இவன் வீட்டுக்கே உதவாமல் போய்விட்டான். ஒரு மகள் இருக்கிறாள். அவளையும் நான் பார்க்க வேண்டும். இதை எப்படி எழுதி வைக்க முடியும்? என்கிறார். ஒன்றும் சொல்லவில்லை. ‘அதுசரி உங்கள் விருப்பம்’ என்று சொல்லி விட்டு வந்து, ஒரு ஆட்டுக் குட்டியை விலைக்கு வாங்கி, அந்த வரியை காமராசர் பெயரில் செலுத்தி, தேர்தலில் நிற்க வைத்தவரும் பசும்பொன் தேவர் திருமகன் என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில்தான், இதே மதுரை மாநகரில், 1937 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் நாள், மதுரை இரயில்வே நிலையத்தில், காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் கூடினார்கள். என்.எம்.ஆர்.சுப்பராமன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூடினார்கள். அண்ணல் காந்தியார் இரயிலில் வாசற்படியில் நிற்கிறார். மக்கள் திரள்கிறார்கள்.

வைத்தியநாத அய்யரும் கலந்து கொண்டார். மகாத்மா காந்தி அவர்களிடம் பேசுகிறார். ‘ஆலயங்களுக்கு உள்ளே அரிஜனங்கள் நுழைய வேண்டும். அதுதான் என் கனவு. அதை நீங்கள் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.’ என்கிறார்.

மதுரையில் காந்தியார்

‘இப்பொழுது நான் திருவனந்தபுரத்துக்குப் போய்க் கொண்டு இருக்கிறேன். திருவனந்தபுரம் மன்னர், அங்கே இருக்கிற கோயில்களை எல்லாம் திறந்து, அரிஜனங்கள் ஆலயங்களுக்கு உள்ளே செல்ல ஏற்பாடு செய்து இருக்கிறார். இங்கே புகழ்மிக்க மீனாட்சி அம்மன் கோயில் இருக்கிறது. இந்த மதுரையிலும் ஆலயத்துக்கு உள்ளே அரிஜனங்கள் செல்ல வேண்டும். அதற்குரிய கருத்து மக்களிடத்தில் உருவாக வேண்டும். அந்தப் பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும்’ என்று மதுரை இரயிலடியில் இந்தக் கருத்தைத்தான் காந்தி அடிகள் பேசிவிட்டு, மீண்டும் அதே இரயிலில் புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றார்.

கிட்டத்தட்ட ஐந்தாறு மாத காலம் அதற்கான ஆயத்த வேலையில் ஈடுபட்ட வைத்தியநாத அய்யர், ஜூலை திங்கள் 8 ஆம் நாள், ‘அங்கயற்கண்ணி ஆலயத்துக்கு அரிஜனங்களை அழைத்துச் செல்வது’ என்று அறிவித்தார். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே அரிஜனங்கள் நுழைவார்களானால் வெட்டுக்குத்து இரத்தக் களரி ஆகும். கையை வெட்டுவோம், காலை வெட்டுவோம், உள்ளே நுழைய விடமாட்டோம் என்று பலபேர் பல இடங்களில் அச்சுறுத்திக் கொண்டு இருந்தார்கள். ஒரே பரபரப்பும் பதட்டமுமாக, என்ன நடக்குமோ என்ற பீதியும் இந்த மதுரை மாநகரில் ஏற்பட்டு விட்டது.

அங்கயற்கண்ணி ஆலயம் இருக்கக்கூடிய நான்மாடக்கூடல், ஆலவாய் நகரில் நான் நின்று பேசுகிறேன். அனல்வாதம் புனல்வாதத்தைச் சந்தித்த திருஞானசம்பந்தரின் காலடிபட்ட இம்மாநகரில் இருந்து பேசுகிறேன். நரியைப் பரியாக்குவதும், பரியை நரியாக்குவதுமான சரித்திரத்துக்குச் சொந்தமான மாணிக்கவாசகர் உலவிய மதுரை மாநகரில் இருந்து நான் பேசுகிறேன். இந்தக் கோவிலுக்கு உள்ளே அரிஜனங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று வைத்தியநாத அய்யர் திட்டமிடுவதைத் தடுப்பதற்கு ரவுடிகள் தயாராகி விட்டார்கள் என்ற செய்தி வந்தபோது, பசும்பொன் தேவர் திருமகனார் ஒரு அறிக்கையை துண்டு அறிக்கையாக அச்சிட்டு மதுரையில் வெளியிட்டார்.

தேவரின் எச்சரிக்கை

அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்:
‘மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே வைத்திய நாத அய்யர் அரிஜனங்களை அழைத்துக் கொண்டு போவதற்கு ஏற்பாடு செய்து இருக்கிறார். ஆனால், அதேநேரத்தில் சனாதனிகள் ரவுடிகள் கூட்டத்தை ஏற்பாடு செய்து, கலவரம் விளைவிப்பதற்குத் திட்டமிட்டு இருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். வைத்தியநாத அய்யரோடு அரிஜனங்கள் உள்ளே நுழைவார்களானால், அவர்களைப் படுபயங்கர மாகத் தாக்கி, அங்கயற்கண்ணி ஆலயத்தை இரத்தக்களரியாகச் செய்வதற்குத் திட்டமிட்டு இருப்பதாக எனக்குத் தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. சனாதனிகள் ஏற்பாடு செய்து இருக்கிற ரவுடிகளை எச்சரிக்கிறேன். வைத்தியநாத அய்யர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே வருகிறபோது, அடியேனும் வருவேன். அவர்கள் திட்டமிட்டபடி கலவரம் செய்ய வருவார்களானால், அந்த ரவுடித்தனத்தைச் சந்திக்க வேண்டிய விதத்தில் நான் சந்திப்பேன்.

இது தேவர் திருமகனாரின் துண்டு அறிக்கை. இந்தச் செய்தி மக்கள் மத்தியில் உலவுவதற்கு பல பேர் ஏன் விரும்பவில்லை?

ஒடுக்கப்பட்டோர் உரிமை பெற்றனர்

தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கின்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே, ஒடுக்கப்பட்ட சமூகத்து மக்களோடு வைத்தியநாத அய்யர் நுழையும்போது எவன் தடுக்க வந்தாலும் நானும் உடன் வருவேன், அவற்றை நானே சந்திப்பேன் என்று தேவர் பிரகடனம் செய்ததால்தான், எட்டுப் பேர்களை அழைத்துக் கொண்டு, 8 ஆம் தேதி வாழ்நாள் எல்லாம் தூய்மையாகவும், நேர்மையாகவும் இருந்து நாணயமான நேர்மையான அரசியல் நடத்தி அமைச்சராக இருந்தபோதுகூட சல்லிக்காசு சேர்த்துக் கொள்ளாது இன்றைக்குச் சிலையாக நிற்கிறாரே காங்கிரசின் மதிப்பு வாய்ந்த தலைவர்களுள் ஒருவரான கக்கன்ஜி, அவரும் ஆறு பேரும் உள்ளே நுழைந்தார்கள். இதை எல்லாம் நான் குறிப்பிடக் காரணம், இப்படி அவருடைய நோக்கம், அவருடைய அணுகுமுறை குறுகிய எல்லைகளைக் கடந்தது.

நேதாஜி

1938 இல் திரிபுரியில் காங்கிரஸ். இரண்டாவது தடவையாக நேதாஜி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டி இடுகிறார். நேதாஜியை நாடு விரும்புகிறது. காந்தி அடிகள் விரும்பவில்லை, படேல் விரும்பவில்லை. இன்னும் பலபேர் சேர்ந்து சூழ்ச்சி செய்தார்கள். அவர்கள் சதி செய்தார்கள். பண்டித நேரு அப்பக்கமா? இப்பக்கமா? என்று கடைசிவரை தீர்மானிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தார். நேதாஜியின் பக்கம்தான் அவரது உள்ளம் இருந்தது.

ஆனால், காந்தியாரின் எண்ணத்துக்கு விரோதமாகச் செல்கின்ற துணிச்சல் பலருக்கு இல்லை. மகாத்மா காந்தியின் வேட்பாளராக பட்டாபி சீதாராமையா போட்டி இடுகிறார். வாக்குப்பதிவு நடக்கிறது. அப்போது என்ன சொன்னார்கள்? காந்தி அடிகளின் தரப்பில் சொல்லப்பட்டது, தென்னாட்டில் இருப்பவர்கள், இன்றைய ஆந்திரம் உள்ளிட்ட திராவிட பூமியாக அன்றைக்குத் திகழ்ந்த சென்னை இராஜதானியில் இருப்பவர்கள், பட்டாபி சீதாராமையாவை விரும்புகிறார்கள் என்றபோது, அதேபகுதி பட்டாபி சீதாராமையாவுக்குப் பின்னால் இல்லை, அது நேதாஜிக்குப் பின்னாலேதான் இருக்கிறது என்பதை நிரூபிக்க, இங்கே இருந்து சென்ற தலைவர்கள் பசும்பொன் தேவர் திருமகனாரும், காமராசரும் ஒருசேர நேதாஜிக்கு ஓட்டுப் போட்டார்கள். இதெல்லாம் ஆவணம்!

ஆனால், உட்கட்சி ஜனநாயகம் அன்றைக்கே சிதைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டது. 105 டிகிரி காய்ச்சலில் நேதாஜி துடித்துக் கொண்டு இருந்தபோதும், ‘காரியக்கமிட்டி கூட்டத்தின் முடிவை நாங்கள் நிறைவேற்றுவோம், காந்தி சொல்வதுதான் காரியக் கமிட்டி. காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு அதிகாரம் இல்லை’ என்று ஜனநாயகத்தைச் சிதைத்தனர். அந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை எல்லாம் விவரிப்பதற்கு நேரம் இல்லை.

நேதாஜி காய்ச்சலோடு மேடையில் வந்து இருந்தார். தானாக ராஜினாமா செய்தார். அதற்குப்பிறகுதான் ‘பார்வர்டு பிளாக்’ என்ற பெயரை, பத்திரிகைக்குச் சூட்டினார். கட்சிக்கும் சூட்டினார். ஆக, காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் சிதைக்கப்பட்டு, அவர் வெளியேற்றப்பட்டார். மேற்கு வங்கத்தில் கல்கத்தாவில் இருக்கிற வெள்ளைக்காரன் நீல் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். எப்படி நீங்கள் அந்தப் பேராராட்டத்துக்கு அறிவிப்பு கொடுக்கலாம்? என்று கட்சியில் இருந்து நடவடிக்கை எடுத்தார்கள். நேதாஜி எந்தத் தவறும் செய்யவில்லை. அந்தக் காலகட்டத்தில்தான் ‘பார்வர்டு பிளாக்’ கட்சி உதயமாயிற்று. வங்கத்துச் சிங்கத்தின் வரலாறு, தியாக வரலாறு. ஈடு இணையற்ற வரலாறு.

நான் இன்றைக்கு மதுரையில் சொல்கிறேன். தோழர்களே, வங்கத்துச் சிங்கம் நேதாஜியின் போராட்டத்துக்கு உரிய இடத்தை இந்த நாட்டுச் சரித்திரத்தில் தருவதற்கு பலர் மறுத்தாலும்கூட, அவருக்கு நிகராக எவரும் இந்த நாட்டில் போராடவில்லை.

அவருடைய படையில், 40,000 தமிழர்கள் இருந்தார்கள். வங்காளிகள் அல்ல - பஞ்சாபிகள் அல்ல - மராத்தியர்கள் அல்ல - குஜராத்திகள் அல்ல - ஒரியாக்காரர்கள் அல்ல - எவரும் இல்லை. நேதாஜியின் படையில் 40,000 தமிழர்கள் இருந்தார்கள்.

அதனால்தான், ‘நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்’ என்று நேதாஜி சொன்னார்.

அவருக்காகத் தமிழர்கள் உயிர்களைக் கொடுத்தார்கள். துப்பாக்கித் தோட்டாக்களை மார்பில் ஏந்தினார்கள். அந்தப் பட்டாளத்தின் அணிவகுப்புக்கு அடித்தளமாக இருந்தவர், பசும்பொன் தேவர் திருமகனார் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

சென்னையில் நேதாஜி

அப்படிப்பட்ட பசும்பொன் தேவர் திருமகனார், 1939 ஆம் ஆண்டு சென்னைக்கு நேதாஜியை அழைத்துக் கொண்டு வருகிறார். பரபரப்பான சூழல். காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். பார்வர்டு பிளாக் கட்சி தோன்றிவிட்டது. சென்னையில் செப்டம்பர் 3 ஆம் தேதி பேசுகிறார். இந்து பத்திரிகை சிறப்பு பதிப்பு போட்டு கடற்கரைக் கூட்டத்தில் விநியோகம் செய்கிறது. உலகத்தைத் திடுக்கிடச் செய்கின்ற செய்தி வந்துவிட்டது. ஆம், ஹிட்லர் தன்னுடைய போரைத் தொடங்கிவிட்டார். ஆக்கிரமிப்பைத் தொடங்கிவிட்டார். செகோஸ்லோவியாவுக்கு உள்ளே நாஜிப்படைகள் நுழைந்துவிட்டன. இந்தச் செய்தியை சிறப்புப் பதிப்பில் பிரசுரித்த பத்திரிகை வெளிவருகிறது. துண்டுச் சீட்டும் மேடையில் போகிறது நேதாஜிக்கு. அவர் இந்திய அரசியலைப் பேசிக்கொண்டு இருக்கிறார்.துண்டுச்சீட்டு வந்தவுடன், உலக அரசியல் பக்கம் திருப்பினார் நேதாஜி.

நான் எல்லோர் உரைகளையும் படித்து இருக்கிறேன். பண்டித ஜவஹர்லால் நேரு எழுதிய உலக சரித்திரக் கடிதங்களைப் போன்ற ஒரு நூல், இதுவரை இந்தியாவில் இன்னொருவர் எழுதவில்லை. அற்புதமான நூல். உரைகள் என்று பார்த்தால், பல்கலைக் கழகங்களில், நகராட்சி மன்றங்களில், கல்லூரி வளாகங்களில், மாநாட்டு மேடைகளில் நேதாஜியின் பேச்சு எந்தப் பொருளை எடுத்தாலும் சரி, மெய்சிலிர்க்க வைக்கும். நாடி நரம்புகளில் ஓடுகின்ற குருதியைச் சூடேற்றும். சிந்திக்க வைக்கும் அற்புதமான பேச்சாளர். அப்படிப்பட்ட பேச்சாளர், பன்னாட்டு அரசியல் பற்றிப் பேசுகிறார். அங்கு இருந்தே சுற்றுப் பயணத்தை இரத்து செய்துவிட்டுப் போகலாமா? என்று நினைக்கிறார். தேவர் திருமகன் சொல்கிறார், மதுரையைச் சுற்றிய சுற்றுப் பயணம் ஏற்பாடு செய்து இருக்கிறேன். நீங்கள் கட்டாயம் வர வேண்டும்‘ என்கிறார். நீண்டநேரம் ஆலோசனை செய்து, மதுரையில் மட்டும் பேசுவது என்று முடிவு எடுக்கிறார்கள். இதே மதுரை மாநகரில் 6 ஆம் தேதி நேதாஜியும், தேவர் திருமனாரும் பேசினார்கள். கடைசியாக நேதாஜி பேசியது மதுரையில்தான்!

இதுதான் வேளை

இங்கே பேசிவிட்டு நேதாஜி, தேவர் திருமகனை அழைத்துக் கொண்டு நாகபுரிக்குப் போகிறார். அங்கே காங்கிரஸ் கட்சியின் கூட்டம். அந்த உறுப்பினர்களை மட்டும் அல்ல, ஜெயப்பிரகாக்ஷ் நாராயணன் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி நடத்தினார் அல்லவா, அவர் போன்ற தலைவர்களையும், பல தலைவர்களை அழைத்து ஒரு கூட்டம், மாராட்டிய மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்தக்கூட்டத்துக்கு பசும்பொன் தேவர் திருமகனாரையும் அழைத்துக் கொண்டு போகிறார் நேதாஜி. அக்கூட்டத்தில் காந்திஜி உட்கார்ந்து இருக்கிறார், பண்டித ஜவஹர்லால் நேரு இருக்கிறார். நேரு நேதாஜியின் மீது மிகுந்த அன்பாக இருந்தவர். கூட்டம் நடக்கிறது. நேரு சொல்கிறார்:‘உலகத்தில் பல நாடுகள் பிரிட்டனை ஆதரிக்கின்றன. எனவே, ஹிட்லரை எதிர்த்து நாமும் இங்கிலாந்தை ஆதரிப்போம்’ என்கிறார். உடனே நேதாஜி கேட்கிறார், ‘பல நாடுகள் என்று சொல்கிறீர்களே, எந்த நாடுகள்? ஆஸ்திரேலியாவா? கனடாவா? இல்லை காலனி நாடுகளாக இருக்கக்கூடிய இலங்கை, பர்மா போன்ற நாடுகளா? எந்த நாடுகள்?’ என்று கேட்கிறார். பதில் சொல்லவில்லை நேரு.

அதற்குப்பிறகு இங்கிலாந்து நாட்டு ஆதரவு நிலை எடுக்கிறபோது, காந்தியாரைப் பார்த்து நேதாஜி சொல்கிறார், ‘கீதையைப் படிக்கிறீர்கள் அர்ஜூனனுக்குக் கண்ணன் சாரத்தியம் செய்தார், கெளரவர்களை அழிப்பதற்காக. அதைப்போல நாட்டை விடுவிக்கின்ற போரில் நீங்கள் கண்ணனாக இருந்து வழி நடத்துங்கள். இது பொருத்தமான வேளை. நம்மை அடிமைகளாக வைத்து இருக்கின்ற பிரிட்டிக்ஷ்காரனை விரட்டுவதற்குச் சரியான நேரம்’ என்று சொல்கிறார்.

வாக்குவாதம் வருகிறது. அதனால், கையில் வைத்து இருக்கின்ற பேனாவை எடுத்து மேஜையில் குத்துகிறார் பண்டித நேரு. அதுமட்டும் அல்ல, ‘ You you you ’ என்று நேதாஜியைப் பார்த்து நேரு சொல்கிறார். அவருக்கு முன்கோபம் அதிகம் வரும். நேதாஜி கோபப்படவில்லை. காந்தியாரைப் பார்த்துச் சொல்கிறார். காலமெல்லாம் நீங்கள் அகிம்சையைப் போதித்தீர்களே, யாரை முன்னிறுத்தி நீங்கள் அகிம்சையைப் போதித்தீர்களோ அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்று பாருங்கள். அழைத்ததால் வந்தேன். எப்படிப்பட்ட மரியாதை கொடுக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி வெளியேறினார். அந்தக் கூட்டத்தில் பார்வையாளராக பசும்பொன் தேவர் கலந்து கொண்டார்.

அதன்பிறகு நேதாஜி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் உண்ணாநோன்பு இருந்து உயிரை முடித்துக் கொள்ளத் தீர்மானித்தார். வேறு வழி இல்லாமல் விடுதலை செய்தார்கள். அவர் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டார்கள். கொல்கத்தாவில் அவருடைய வீட்டு மாடியிலேயே தங்கி இருக்கிறார். அடியேன் அந்த வீட்டுக்குச் செல்கிற வாய்ப்பு கிடைத்தது. நேதாஜியின் அண்ணன் மகன் சிசிர் குமார் போஸ் அவர்கள், ஜனவரி 23 ஆம் தேதி நேதாஜி பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசுவதற்கு என்னை அழைத்துச் சென்றார்.

அவர் தங்கி இருந்த அறை, படுத்து இருந்த படுக்கை எல்லாம் அப்படியே இருக்கிறது. அந்த இடத்தில் இருந்து ஒரு நள்ளிரவு நேரத்தில் சிசிர்குமார் போஸ் காரை ஓட்ட, அங்கிருந்து புறப்பட்டு, ஆப்கானிஸ்தான் காபூல் வழியாக, ரக்ஷ்யா சென்று, மாஸ்கோ வழியாக பெர்லின் போய்ச் சேர்ந்தார் நேதாஜி. இது சரித்திரம். அப்படிப்பட்ட நேதாஜி அவர்களோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் ஆவார்கள். 1962 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி, இத்தென்னாட்டு மக்கள் தைப்பொங்கல் கொண்டாடிக் கொண்டு இருந்தபோது, இந்த மதுரை மாநகரில் தமுக்கம் மைதானத்தில் பசும்பொன் தேவர் திருமகனார் பேசிய கடைசி கூட்டம். அந்தக் கூட்டத்தில் ராஜாஜியும் கலந்து கொண்டார்.

டி.வி.எஸ். விருந்தினர் விடுதியில் இருவரும் சந்திக்கிறார்கள். அங்கிருந்து கூட்ட மேடைக்கு சேர்ந்தே வருகிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஐந்து இலட்சம் பேர் கலந்துகொண்டதாக அன்றைய செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. வரலாறு காணாத கூட்டம். ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு மக்கள் பசும்பொன் தேவர் திருமகனாரைப் பார்க்கிறார்கள். ராஜாஜி அமர்ந்து இருக்கிறார். கூட்டத்தில் இருப்பவர்கள் தேவர் திருமகனைப் பார்த்து கைகளைக் காட்டிக்காட்டி, ‘அய்யோ அய்யோ’ என்று வேதனைப்படுகிறார்கள். பலர் அழுகிறார்கள். ‘இப்படி மெலிந்து விட்டாரே, அய்யோ இப்படி ஆகிவிட்டதே’ என்று கூட்டத்தில் இருப்பவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

இரண்டரை மணிநேரம் பேசினாலும்கூட, சிம்மம் போல் நின்று பேசுகின்றவர் தேவர் திருமகன். பேசும்போது, துண்டுக்குறிப்புகளையும் பார்க்க மாட்டார். சோடா அருந்த மாட்டார். தண்ணீர் அருந்த மாட்டார். எத்தனை மணிநேரம் பேசினாலும், இடையில் ஒரு வினாடி கூட வேறுபக்கம் கவனத்தைத் திருப்ப மாட்டார். ‘அர்ஜூனன் கணையும், அம்பின் நுனியும், பறவையின் கழுத்தும் ஒரே நேர்கோட்டில் இருந்தது’ என்று மகாபாரதம் சொல்கிறதே, அதைப்போல எது இலக்கோ, அந்த இலக்கையே குறியாக வைத்துப் பேசுவார்.

ஆனால், அன்றைக்குத்தான் முதன் முதலாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே பேசினார். அவருடைய தோற்றத்தில் ஏற்பட்ட நலிவைப் பார்த்து மக்கள் அழுதார்கள்.

கடுகு அளவும் இல்லை

அதற்கு முன்னர் நான் ஒன்றைத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், சரித்திரத்தில் சில செய்திகள், இல்லாத ஒன்றைக் கறை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற கவலையின் காரணமாக நான் சொல்கிறேன். நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. தென்னாட்டில் முதுகுளத்தூர் வட்டாரத்தில் நடக்கக் கூடாத கலவரம் நடந்து விட்டது. இரத்தம் கரைபுரண்டு ஆறாக ஓடியது. உயிர்கள் பலியாகின. குய்யோ முறையோ என்று இருதரப்பிலும் அழுகையும் கண்ணீருமாக இருந்தது. நான் சொல்கிறேன் சகோதரர்களே, தேவர் திருமகனார் உள்ளத்தில் எந்தப் பகை உணர்வும், யாருக்கும் தீங்கு செய்யவேண்டிய எண்ணமும் கடுகு அளவும் கிடையாது என்பதை நான் இந்த மாசிவீதியில் சொல்ல விரும்புகிறேன்.

அப்பொழுது சொன்னார்: ‘ஒடுக்கப்பட்ட சமூகத்து மக்களை - என் அரிஜன சகோதரர்களை யாராவது தாக்கி, அவர்களுக்குத் தீங்கு செய்வீர்களானால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவீர்களானால், என் இருதயத்தைப் பிளந்து இரத்தத்தைக் கொட்டச் செய்கிறீர்கள்’ என்று அறிக்கை விட்டார் அவரைப் பொறுத்தமட்டில் அவருடைய ஆயிரம் ஏக்கர் நிலபுலன்களை அள்ளித்தருகிறபோது, அனைத்து சமூக மக்களுக்கும் தலித் சமூகத்துச் சகோதரர்களுக்கும் சேர்த்தே அனைவரும் அவற்றை பயன்படுத்திக் கொள்ளட்டும் என்ற நோக்கம்தான் அவருக்கு இருந்தது.

நீதிமன்றத்தில் தேவர்

நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். புதுக்கோட்டை நீதிமன்றம். அந்த நீதிமன்ற நிகழ்ச்சியைப்பற்றி அப்பொழுது அரசாங்க வழக்கறிஞராக இருந்த எத்திராஜ் சொல்கிறார். சென்னையில் எத்திராஜ் கல்லூரி, அவர் பெயரில்தான் இருக்கிறது. புகழ்பெற்ற வழக்கறிஞர் எத்திராஜ். அவருக்கு உதவி செய்தவர் பின்னாளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கிருக்ஷ்ணசாமி ரெட்டியார். அவரும் அரசுத் தரப்பு வக்கீல்தான். தேவர் திருமகனுக்கு வாதாடியவர் வி.ராசகோபாலச்சாரியார் என்ற புகழ் பெற்ற வக்கீல். புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு. குற்றவாளிக் கூண்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டார். அவரைப் பார்த்ததும், எத்திராஜ் உள்ளத்தில் ஏற்பட்ட உணர்ச்சியால், அவர் நீதிபதியைப் பார்த்துச் சொன்னார். ‘இவர் மக்கள் தலைவர். இலட்சக்கணக்கான மக்கள் நேசிக்கிற தலைவர். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவருக்கு நாற்காலி போட்டுத்தர வேண்டும். அந்த நாற்காலியில் அவரை உட்கார வைக்க வேண்டும்’ என்கிறார். இப்பொழுது இருக்கக்கூடிய சட்டத்தின் அடிப்படையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொடுத்து இருக்கின்ற ஒரு உத்தரவின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை உட்கார வைக்க வேண்டும் என்று ஒரு உத்தரவு இருக்கிறது. அது அப்பொழுது கிடையாது.

ஆனால், அரசுத் தரப்பு வக்கீல் சொல்கிறார், ‘இவர் மாபெரும் தலைவர் இவருக்கு நீங்கள் நாற்காலி கொடுக்க வேண்டும்’ என்று சொல்கிறார். சுற்றும்முற்றும் பார்க்கிறார்கள். நாற்காலி இல்லை. கிருக்ஷ்ணசாமி ரெட்டியார் சொல்கிறார், இது ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்து இருக்கிறது. ‘என்னுடைய நாற்காலியை அந்தப் பெருமகனுக்குத் தாருங்கள்’ என்று அரசு வக்கீல் சொல்கிறார். நீதிபதி அனந்தசயனம் அய்யங்கார். பின்னாளிலே தலைமை நீதிபதியாக உயர்நீதிமன்றத்துக்கு வந்தவர். உடனே உத்தரவு இடுகிறார். ‘நாற்காலி போடுங்கள்’ என்கிறார். நாற்காலியைக் கொண்டுவந்து போடுகிறார்கள். வழக்கத்தை மீறி கரவொலி எழுகிறது. பொதுவாக நீதிமன்றத்தில் கைதட்டக்கூடாது. வெளியே இருந்து வந்த மக்கள் எல்லாம் கரவொலி எழுப்புகிறார்கள். கிருக்ஷ்ணசாமி ரெட்டியார் குறிப்பிடுகிறார். ‘பகல் உணவுக்காக இருதரப்பு வழக்கறிஞர்களும் வெளியே சென்றுவிடுவார்கள். எல்லோரும் போய் விடுவார்கள். ஆனால்,தேவர் திருமகன் அந்த நாற்காலியை விட்டு அசைய மாட்டார். காலையில் இருந்து மாலை வரை ஒருசொட்டுத் தண்ணீர் குடிக்க மாட்டார் நீதிமன்றத்தில். யாரிடமும் பேச மாட்டார். இடைவேளை நேரத்தில் கூட யாரிடமும் பேசமாட்டார். அமைதியாக அமர்ந்தே இருப்பார். ’ என்று சொல்கிறார்.

வள்ளலாரும் தேவரும்

இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் நினைவுக்கு வருவது, அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை வடலூர் வள்ளலார்தான். அவர் மீது ஆறுமுக நாவலர் வழக்குத் தொடுத்து, நீதிமன்றத்துக்கு உள்ளே வடலூர் வள்ளலார் வருகிறபோது, குற்றம் சாட்டிய ஆறுமுக நாவலர் உள்பட, நீதிபதியும் எழுந்து நின்றதாக இந்த நாட்டின் கடந்த கால நிகழ்வுகள் சொல்லுகின்றன.
வடலூர் வள்ளலாரைப் போலவே, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாருக்கும் நீதிமன்றத்திலே அப்படிப்பட்ட கெளரவம் கொடுக்கப்பட்டது. அவர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும், அவர் உள்ளம் வாடியது. மனம் உடைந்தார். வேதனையைச் சுமந்தார்.

அதற்குப்பிறகுதான், கிட்டத்தட்ட நான் முன்னே குறிப்பிட்டதைப்போல, ஒவ்வொரு முறையும் அவர் அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதிக்கு நின்றாலும் சரி, திருவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு நின்றாலும் சரி, 1952, 1957, மீண்டும் 1962 அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி 1952, 1957 இலும் அவர் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் சேர்ந்தே போட்டி இட்டார். ஓட்டுக் கேட்கப் போகாமல் வெற்றி பெற்ற ஒரு தலைவன் உண்டென்று சொன்னால் அது பசும்பொன் தேவர் திருமகனார்தான். அதைப்போல தொகுதிக்குச் செல்லாமல் வெற்றி பெற்றவர், கேரளாவில் மஞ்சேரி தொகுதியில் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத். ஓட்டுக் கேட்கச் செல்லாமல் நோய்ப்படுக்கையில் இருந்துகொண்டே கோடிக்கணக்கில் வாக்குகளை வாரிக் குவித்தவர் புரட்சித் தலைவர்.

பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் நாடாளுமன்றத்தில் அற்புதமான உரைகளை ஆற்றி இருக்கிறார். 1959 ஆம் ஆண்டுக்குப்பிறகு, மூன்று ஆண்டுகள் கழித்துப் பேசுகிறார். 1962 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி அவர் பேசுகிறபோது சொல்கிறார். ‘1959 ஆம் ஆண்டில் கடைசியாக உங்களை நான் சந்தித்தேன். மகாஜனங்களே, மனித தெய்வங்களாக நான் மதிக்கின்ற ஒருமித்த சக்தியான உங்கள் முன்னால் இன்றைக்கு இருக்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் உங்களிடத்தில் பேசினேன். அன்றைய நாளைப்போலவே இன்றைக்கும் இலட்சம் பேர் வந்து இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு, அப்போது அவர் தெரிவிக்கின்ற செய்திகள், இன்றைக்கு மதுரை மக்கள் யோசிக்க வேண்டிய செய்திகள்.

காலத்தை வென்ற வரிகள்

சில கருத்துகள் எந்தக் காலத்துக்கும் பொருத்தமாக இருக்கும். வள்ளுவன் கருத்தைப்போல, எந்தக் காலத்துக்கும் பொருத்தமாக இருக்கும். அதுபோல, தேவர் திருமகன் சொன்ன வார்த்தைகள், இன்றைக்கும் எல்லோராலும் உச்சரிக்கப்படுகின்ற சொற்கள்.

‘வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்.
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்’,‘பெண்ணுக்கு உயிர் கற்பு’, ‘மனிதனுக்கு உயிர் மானம்’
என்று முழங்கினார்.

ஆள் தூக்கிச் சட்டத்தை அடியோடு அகற்றுவதற்குத்
தோள்தட்டி நின்றாரடி கிளியே
துணிவுள்ள தேவர் சிங்கம்

இது நாட்டுப்புறப் பாடல்.

அப்படி தன்னுடைய வாழ்வில், அடக்குமுறைகளை எதிர்த்து நாட்டுக்காகப் போராடிய தலைவர், தனக்கென்று எதையுமே நாடிக்கொள்ளாத தேடிக் கொள்ளாத, விளம்பரப்படுத்திக்கொள்ளாத தலைவர் அவர்.  இன்றைக்குத் தேவர் திருமகன் உயிரோடு இருந்தால் எதைச் சொல்வாரோ அதைச் சொல்கிறேன். அவருடைய கடைசி உரையில், இதைத்தான் குறிப்பிடுகிறார்.

எனக்கு எதிரிகள் இல்லை

‘நான் என் சக்திக்கு மீறி காங்கிரஸ் கட்சிக்கு உழைத்தேன். என் சக்தியைக் கடந்தும் நான் காங்கிரஸ் கட்சியை வளர்க்கப் பாடுபட்டேன். ஆனால், அதே காங்கிரஸ் கட்சி, என் மீது கொலைக்குற்றம் சாட்டிற்று. அதை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக முறையற்ற செயல்கள் பலவற்றில் அது ஈடுபட்டது. நான் சிந்திப்பது, நான் பேசுவது, நான் எழுதுவது, நான் செயல்படுவது எல்லாமே தேசத்துக்காகத்தான். நான் எனக்கென்று எதையும் தேடுவது இல்லை என்று திட்ட வட்டமாக முடிவெடுத்தவன் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நான் எவரையும் எதிரியாகக் கருதவில்லை. எனக்கென்று எதையும் தேடாத நான், யாருக்கு எப்படி எதிரியாக முடியும்?

இது தேவர் வாக்கு.

யாரையும் நான் எதிரியாகக் கருதவில்லை. யார் மீதும் ஆத்திரம் இல்லை என்று சொல்கிறார். என்னை எதிரியாகவோ, நண்பனாகவோ கருதுகிறவர்கள், அவரவர்கள் விருப்பப்படி கருதிக் கொள்ளட்டும் என்று சொல்லிவிட்டு, ‘நான் பதவியை விரும்பாதவன் என்பது உங்களுக்குத் தெரியும். ராஜாஜி பதவியைப் பார்த்துச் சலித்தவர் என்பதும் உங்களுக்குத் தெரியும். எனக்கு ஏதோ பதவி வேண்டும் என்பதற்காக அல்ல. எது உண்மையோ, மக்களுக்கு எது நியாயமோ அதை பச்சைபச்சையாகச் சொல்கிற நான், ஆளும் கூட்டத்துக்கு அனுசரணையாக இருக்க முடியாது என்பது எனக்குத் தெரியும்.

இன்றைக்கும் பொருந்தும்

ஆனால், ஆளுகிற அரசு அதிகாரத்தை அவர்களே தொடர்ந்து ஆளவேண்டும் என்பதற்காக அக்கிரமம் செய்கிறார்கள். அக்கிரமமான சூழ்நிலையில் மக்கள் சிக்கி இருக்கிறார்கள் என்றார். திடீரென்று யாராவது ஒருவர் இந்த நேரத்தில் மதுரைக்கு வந்து, தற்செயலாக பேருந்து நிலையத்தில் இருந்து, ரயிலடியில் இருந்து வந்து, இந்தப் பேச்சை இப்பொழுது கேட்டால், தேவர் திருமகன் அன்றைக்குச் சொன்னது என்று நினைக்க மாட்டார்கள். ஒரு அக்கிரமமான சூழலில் மக்கள் சிக்கி இருக்கிறார்கள் என்று இன்றைக்குத் தமிழகத்தில், அதிலும் குறிப்பாக மதுரையில் இருக்கிற நிலைமையைத்தான் வைகோ பேசுகிறான் என்று நினைப்பார்கள். நான் வேறு ஒன்றும் சொல்லவில்லை.

தேவர் அவர்களுக்கே உரிய நாகரிகமான மொழியில், முரடர்கள் என்று சொல்கிறார். குண்டர்கள், காலிப்பயல்கள் என்று சொல்லாமல், ரவுடிகள் என்று சொல்லாமல், நாட்டு மக்களின் உரிமைகளை வேட்டையாடுகின்ற காட்டுமிராண்டிகளின் கூட்டம் என்று சொல்லாமல், முரடர்கள் என்று சொன்னார். வைகோ சொல்வான், ஆனால் அன்றைக்கு இருந்த நிலைமைக்கு அது தேவை இல்லை, இன்றைக்கு அது தேவை இருப்பதால் நான் அதைச்சொல்வேன். ஆனால், அவர் சொல்கிறார் ‘முரடர்களைப் பயன்படுத்து கிறார்கள். பலாத்காரத்தைப் பயன்படுத்துகிறது அதிகாரத்தின் மூலம் பயமுறுத்துகிறது’ என்று சொல்கிறார்.

அன்று சொன்னது இன்றும் நடக்கிறது

தேவர் திருமகன் சொன்னது எல்லா காலத்துக்கும் பொருந்தும் அல்லவா?
தேவர் திருமகன் அன்றைக்குச் சொல்கிறார். இன்று நடப்பது என்ன? ஆளும்கூட்டம் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டு, தொடர்ந்து ஆட்சி நடத்துவதற்காக, எங்கே அவர்களுக்குப் பலம் இல்லையோ அங்கே முரட்டுத் தனமான ஆட்களை, முரடர்களை ஏவி கலவரம் செய்கிறார்கள்.
தேவர் திருமகன் அவர்கள், ‘ஜனநாயகத்தில் ஆளுங்கட்சியும்,எதிர்க்கட்சியும் இரண்டு கண்களில் ஒரு கண். இரண்டு கண்களும் சரியாக இருந்தால்தான் பயணம் சரியாக இருக்கும். இல்லாவிட்டால் இடறும் மூளியாகும் நிலைமை ஏற்படும். இந்த அக்கிரமச் சக்திகளை உடனே தடுத்து நிறுத்தாவிட்டால், பிறகு எப்பொழுதுமே தடுக்க முடியாது. இந்த நாசசக்திகளே சாஸ்வதமாகி விடும். மதுரைக்கு அப்படிப்பட்ட அபாயம் நேர்ந்துவிடக்கூடாது இப்பொழுது. நாசசக்திகளே சாஸ்வதமாகி விடக்கூடாது’ என்றார்.

ஆட்சியும், அதிகாரமும் இருக்கிறது என்பதால், இன்றைக்கு மதுரையில் அக்கிரமம் செய்கிறார்களே? மேற்குத் தொகுதி, மத்தியத் தொகுதி வாக்காளப் பெருமக்களே, நான் மக்கள் ஆட்சியை மதிப்பவன்தான். ஆனால் தேவர் திருமகன் சொன்னார். இலஞ்சம் கொடுத்து, பணம் கொடுத்து அதிகாரத்தைத் தக்கவைக்க நினைப்பவர்களைப்பற்றி அந்தக் கூட்டத்தில் சொன்னார். ‘மகாஜனங்களே, முளைப்பாரிக் கொட்டுக்கு 2 ரூபாய் செலவழித்துப் போய்ப் பார்க்கிறீர்கள். ஜல்லிக்கட்டைப் பார்க்க 4 ரூபாய் கொடுத்து பார்த்து ரசித்துவிட்டு வருகிறீர்கள். சினிமாவுக்கு 5 ரூபாய் கொடுத்து பார்த்து அனுபவித்து வருகிறீர்கள். ஆனால், ஓட்டுப் போடுவதற்கு நமக்கு எவனாவது காசு, பணம் தருவானா? என்று நீங்கள் எதிர்பார்க்கலாமா? என்று கேட்டார்.

காவல்துறை எங்கே?

இன்றைக்குப் பல இலட்சம் பேர் வந்தார்களே, நாங்கள் ஏன் தாமதமாக வந்தோம்? மூன்று மணிநேரம் தாமதமாகத்தான் பசும்பொன்னுக்கு உள்ளே செல்ல முடிந்தது என்றால், மக்கள் கூட்டம் பல இலட்சம். வேதனையோடு நான் குற்றம்சாட்ட விரும்புகிறேன். முதல் அமைச்சர் அவர்களே, உங்களிடம் காவல்துறை இருக்கிறது. இன்றைக்குப் பத்து இலட்சம் பேர் கூடுகின்ற இடத்தில் ஏன் காவல்துறை பாதுகாப்பு இல்லை? எத்தனை பேர் வந்தார்கள்? எங்கே இருந்தார்கள்? வந்த ஒன்றிரண்டு காவல் துறையினரும் அவரவர்கள் வேலையைப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். அப்படியானால் எதற்கு காவல்துறை?

நேற்றைக்கு ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருக்ஷ்ணசாமி வேல் கம்பால் தாக்கப்பட்டு உள்ளார். கொஞ்சம் மயிரிழை அளவு வேல்கம்பு மேலே பாய்ந்து இருந்தால், இதயத்தில் பாய்ந்து உயிரே போய் இருக்கும். ஈரோடு கவுந்தம்பாடி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, விடியற்காலை 4 மணிக்கு மதுரைக்கு வந்தேன். நேராக நான் அப்பல்லோ மருத்துவமனைக்கு பதட்டத்துடன் சென்றேன். விபரீதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்ற கவலையில் சென்றேன். அரசியல் எல்லைகள் என்பது வேறு, மனிதாபிமானம் என்பது வேறு. மருத்துவர்கள் சொன்னார்கள், ஒன்றும் பயப்பட வேண்டியது இல்லை, உயிருக்கு ஆபத்து இல்லை’ என்றார்கள். இலட்சக்கணக்கான மக்கள் கூடப்போகிற விழா நிகழ்ச்சியை ஒட்டி, எந்த நேரமும் பதட்டமான நிலைமை ஏற்படக்கூடும் என்ற கடந்தகால சரித்திரத்தை மனதில் கருதி, இந்தத் தலைவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீங்கள் ஏன் உத்தரவு போடவில்லை? உங்களது உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது? தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவினுடைய தவறு, தோல்வி. கடமை தவறிய தோல்வி. இதற்குத்தானே வைத்து இருக்கிறீர்கள்? வேறு எதற்கு வைத்து இருக்கிறீர்கள்? உங்கள் சொந்தக் குடும்பங்கள் விவாகாரங்களைக் கவனிக்க மட்டும் வைத்து இருக்கிறீர்களா? இன்றைக்குப் பல்லாயிரக்கணக்கான போலிஸ் கொண்டுவந்து நிறுத்தி இருக்க வேண்டாமா? போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி இருக்க வேண்டாமா? ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்துவிட்டால் எவ்வளவு பெரிய கேடு நடந்துவிடும்?

கடமையைச் செய்யவில்லை

புரட்சித் தலைவியின் ஆட்சியில்தானே தென்னாட்டிலே எந்தக் கலவரமும் இல்லாமல் அமைதிப் பூங்காவாக இருந்தது. யாரும் மறுக்க முடியாது. ஆனால், உங்கள் ஆட்சியில்தான் இரத்தக் களரியும், பிணங்கள் விழுந்தவண்ணமாக இருந்தது கடந்தமுறை? அந்த மாதிரி நிலைமை வந்து விடவே கூடாது. ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டால், தீப்பொறி வதந்திகளாகி, அதற்கு கண், காது, மூக்கு வைத்து, கையும் காலும் முளைத்து, விஷமிகள், சமூக விரோதிகள், இருக்கிற சமூக ஒற்றுமையைக் குலைக்க, கலவரம் நடத்த இதையே பயன்படுத்தும் ஒரு சூழ்நிலை வந்து விடக்கூடாதே என்ற கவலையில் செயல்பட்டு இருக்க வேண்டாமா? தமிழ்நாடு அரசு கடமையைச் செய்யவில்லை.நல்லவேளை, எந்தச் சம்பவமும் நடக்கவில்லை. தேவர் திருமகனின் புகழ் நிலைக்கட்டும்.

இளைஞர்களால் பெருமை

பெருமையோடு சொல்கிறேன் தோழர்களே, இன்றைக்கு வந்தவர்களில் 80 சதவிகிதம் இளைஞர்கள். நான் இந்தத் தமிழ் மண்ணை எண்ணிப் பெருமைப்படுகிறேன். ஒரு சின்ன அசம்பாவிதம் கூடக் கிடையாது. காவல்துறை கடமையாற்ற விட்டாலும், அவரவர்கள் பொறுப்போடு இருந்து, இந்நிகழ்ச்சியில் எந்தச் சின்ன சலசலப்புக்கும் இடம் இல்லாமல், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - பார்வர்டு பிளாக் கட்சி - காங்கிரஸ் - பொதுவுடைமை இயக்கம் - சமூக அமைப்புகள் - முக்குலத்தோர் அமைப்புகள் பல்வேறு அமைப்புகள் என இத்தனை இலட்சம்பேரும் வந்து எந்த சின்ன பிரச்சனைகூட இல்லை என்பதால் நான் பெருமைப்படுகிறேன்.

இன்றைக்குப் பசும்பொன்னுக்கு வந்துவிட்டுப்போன வாலிபர்கள், இளைஞர்களை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். அவ்வளவு கட்டுப்பாடோடு நடந்து, முதல்வர் கடமை தவறினாலும், இந்த மண்ணின் மக்கள், இந்த மண்ணின் மைந்தர்கள் கடமையைச் செய்து இருக்கிறார்கள்.

உத்தமத் தலைவனின் புகழ் வாழ்க!

‘கட்டுண்டோம் பொறுத்து இருப்போம். காலம் மாறும்’ என்றான் பாரதி. அதைப்போல, காலம் மாறும், காரியங்கள் தானாக நடக்கும். இது தேவர் திருமகன் அருள்வாக்கு. தேவர் திருமகனாரின் நூறாவது ஆண்டு இது தொடக்கவிழா. வாழ்நாள் எல்லாம் நாட்டுக்காகவே வாழ்ந்த உத்தமத் தலைவனின் புகழ் வளரட்டும்!

தேவர் பெருமகனாரே, பசும்பொன் தங்கமே, தென்னாட்டுச் சிங்கமே, எளியவனான எனக்கு, உள்ளத்துக்கு வலிமையும் நியாயத்துக்குப் போராடுகிற வலுவையும் என் உடலுக்கும் தோள்களுக்கும் அருள்வீராக!

நன்றி, வணக்கம்!

(வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.)
(தேவர் ஜெயந்தி விழா, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி சந்திப்பு, மதுரை 30.10.2007)

Thanks to MDMK.ORG